Actor Mansoor Ali Khan: ’எல்லாத்துக்கும் அரசை குறை சொல்ல முடியாது’ - கார் மீது ஏறி உதவி கேட்ட மன்சூர் அலிகான்!
Actor Mansoor Ali Khan: வெள்ள நீரில் மூழ்கியுள்ள பகுதியில் இருந்து பிரபல நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழையால் வெள்ள நீரில் மூழ்கியுள்ள அரும்பாக்கம் பகுதியிலிருந்து பிரபல நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 4-ம் தேதி வங்கக் கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் சென்னை வழியாக ஆந்திராவை அடைந்து கரையை கடந்தது. பெரு மழையில் வெள்ளக்காடானது சென்னை. பெரும்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, வட சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் வடியாமல் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,” இது அரும்பாக்கம், திருக்கமலம் கோயில் மூன்றாவது தெரு. 100 மீட்டர் தொலைவில் கூவம் ஆறு உள்ளது. செம்பரம்பாக்கம் தண்ணீர் நம்ம ஏரியாவிற்கு வருவது அரிது. அணை தண்ணீர் திறந்துவிட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும். கூவம் ஆறை ஒட்டியுள்ள பகுதி இது என்பாதல் தண்ணீர் வரும். பலரும் தாழ்வாக கட்டிட்டாங்க. நான் கொஞ்சம் உயராமாக வீடு கட்டியதால் தப்பித்தேன். இப்போ வீட்குள்ள செம்பரம்பாக்கத்தில் இருந்து மீனெல்லாம் வந்துவிட்டது. முடிந்த அளவு வீடு தேடி வருவது பெரும் அதிசயம். என்னோட வாத்துகள் சாப்பிட்டது போக, மிஞ்சம் கிஞ்சம் மீன் இருக்கு. மிச்சம் உள்ள மீனை பொரிந்த்து சாப்பிடனும். ” என்று விளையாட்டுப் பேச்சுடன் வீடியோவில் பேசியுள்ளார்.
மேலும், ”எல்லாவற்றிற்கும் பெருநகர மாநகராட்சியை, அரசை குறை சொல்ல முடியாது. ஏனெனில், செம்பரம்பாக்கம் அணையில் நீர் அதிகமாக இருந்தால் அதை திறந்துவிட்டே ஆக வேண்டும். இல்லையெனில் அது அணை உடைந்துவிடும். ஏரி கரையில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வந்துவிட்டது. ஏனெனில், பெரும் மழை. புயல். எதுவும் செய்ய முடியாது. அரசை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நிஜத்தை பேசனும். கூவம் ஆற்றிற்கு அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள எல்லாரும் பாதிக்கப்படுவார்கள். எல்லாம் ஆக்கிரமிப்பு (Encrochment) பகுதிகளில் கட்டப்பட்டது. ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் இந்த வேதனைகளையெல்லாம் தாங்க வேண்டியதாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் அதிக கொள்ளவு கொண்ட ஏரி. அது நீர் நிரம்பி உடைந்துவிட்டால் சென்னையே மூழ்கிவிடும்.” என்று வீடியோ மூலம் விழிப்புணர் ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார்.
உணவு கொடுத்து உதவுங்கள்!
அரும்பாக்கம் பகுதியில் மக்கள் வெள்ள நீரில் உணவின்றி தவிப்பதாகவும் வீடியோவில் கூறியுள்ளார். “அரும்பாக்கத்தில் உள்ள தண்ணீரை எடுத்துவிடுங்கள். இந்த நீர் கூவம் ஆற்றின் வழியாக சென்று கடலில் கலக்க வேண்டும். இங்குள்ள மக்களுக்கு சாப்பாடில்லை. எங்கள் வீட்டில் உள்ள விறகு மழைநீரில் நனைந்துவிட்டது. விறகு இருந்தால் கொடுங்கள். நான் என் வீட்டில் சமைத்து கொடுக்கிறேன், இல்லையெனில் உணவு வழங்க நினைப்பவர்கள் பெரிய வண்டியில் மட்டுமே உள்ளே வரமுடியும். சின்ன வாகனங்கள் வர இயலாது. உணவு வழங்கி உதவலாம்,” என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.
வரலாறு தெரியுமா?
” 1981/82-ன்னு நினைக்கிறேன். மோர்பி. கடிகாரங்கள் தயாரிப்பதற்கு பெயர்பெற்ற இடம். குஜராத்தில் இருக்கிறது. Wall Clock City of India. உலகத்திற்கே கடிகாரம் தயாரிக்கும் ஓர் ஊர். அந்த நகரமே நீரில் மூழ்கடிக்கப்பட்டிருச்சு. இரவோடு இரவாக ஏராளமானோர் வெள்ள நீரில் மூழ்கி இறந்தனர். பி.பி.சி. செய்திகளில் அங்கிருந்து வந்த செய்திகளை வைத்தே தெரிந்துகொள்ள முடிந்தது. உடனடியாக இராணுவத்தை அனுப்பி மீட்பு பணிகள் நடைபெற்றன. பெரிய அணைகள் உடைந்தால் நிலைமை மிகவும் மோசமாகும். அதனால்தான் இந்த அசெளரியங்களை சந்திக்க வேண்டியிருக்கு. தண்ணீர் இயற்கையாக சென்றுவிடும். தண்ணீர் தேங்குவதால் நோய்தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. உணவு அனுப்ப விரும்புபவர்கள் வழங்கலாம்.” என்று பேசியுள்ளார்.