நான் சொன்ன பின்தான் ரஜினியே அதை யோசித்தார்...ரஜினிக்கே கிளாஸ் எடுத்த மணிகண்டன்
பாட்ஷாவை விட அண்ணாமலை படமே தனக்கு பிடிக்கும் என்று ரஜினியிடம் சொன்னதாகவும் இதற்கான காரணத்தை சொன்னபோது ரஜினியே அண்ணாமலை நினைத்து பாராட்டியதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்

ரஜினிகாந்த்
கோலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். வயதானாலும் இன்னும் அதே மாஸ் அதே ஸ்டைலுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ரஜினியை கொண்டாடி வருகிறார்கள். ரஜினி நடித்த படங்களில் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்த படம் என்று பாட்சா படத்தை சொல்லலாம். ஆனால் பாட்சாவை விட அண்ணாமலை நல்ல படம் என்று நடிகர் மணிகண்டன் ரஜினியிடமே சொல்லியிருக்கிறார். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய மணிகண்டன் ரஜினியுடனான உரையாடலை பகிர்ந்துகொண்டார்.
பாட்ஷாவிட அண்ணாமலை நல்ல படம்
" காலா படத்தின் போது ரஜினி நடித்த படங்களில் எங்களுக்கு பிடித்த படம் பற்றி கேட்டார். எல்லாரும் பாட்ஷா பிடிக்கும் என்று சொன்னார்கள். நான் மட்டும் அண்ணாமலை படம் பிடிக்கும் என்று சொன்னார். ஏன் உங்களுக்கு பாட்ஷா பிடிக்காதா என்று ரஜினி என்னிடம் கேட்டார். எனக்கு பாட்ஷா பிடிக்கும் ஆனால் அண்ணாமலை தான் எனக்கு பிடித்த படம். பாட்ஷா படத்தில் எதிரில் இருப்பவன் எதிரி எப்படியும் அவனை கடைசியில் கொல்லதான் போகிறீர்கள். ஆனால் அண்ணாமலை படத்தில் எதிரில் இருப்பது நண்பன். தனது நண்பனை ஜெயித்து எல்லாம் முடிந்த பிறகு அண்ணாமை நம்ம என்ன இவ்வளவு கேவலமான ஆளா மாறிட்டோம் என்பதை உணர்கிறான். பின் தனது அம்மாவிடம் அந்த இடத்தை நண்பனுக்கே கொடுத்துவிடும்படி சொல்கிறார். அப்படி சொல்லும் போது அண்ணாமலை ஒரு சாதாரணமான மனிதனைவிட உயர்ந்த மனிதனாக மாறிவிடுகிறார் என்று சொன்னேன். நான் இப்படி சொன்னதும் ரஜினி அவர் படத்தை யோசித்து ரசிக்க ஆரம்பித்துவிட்டார். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு அண்ணாமலை நல்ல படம் என்று ரஜினியே சொன்னார்"
View this post on Instagram





















