மேலும் அறிய

Pasanga Kishore Marriage : திடீர் திருமணம் செய்துகொண்டதற்கான காரணம் இதுதான்.. காரணம் சொன்ன கிஷோர் மனைவி

பசங்க படத்தில் நடித்த கிஷோர் திடீர் திருமணம் செய்துகொண்டதன் காரணத்தை விளக்குகிறார், அவரது மனைவியான ப்ரித்தி

பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர் திடீர் திருமணம் செய்துகொண்டதன் காரணத்தை தெரிவித்துள்ளார் அவரது மனைவியான தொலைக்காட்சி நடிகர் ப்ரீத்தி.

கடந்த 2009-ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் பசங்க. விமல், , வேகா, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ ராம், பக்கோடா பாண்டி ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். அன்பு கதாபாத்திரத்தின் வழியாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கிஷோர். இந்தப் படத்திற்காக சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய விருதை வென்றார் கிஷோர். பசங்க படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மிலடன் இயக்கிய கோலி சோடா படத்தில் நடித்தார் கிஷோர். இந்தப் படமும் பெரிய வெற்றி பெற்றது.

திடீர் திருமணம்

தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வந்த கிஷோர் திடீரென நேற்று திருமணம் செய்துகொண்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் திருமணத்திற்குப் பின்னிருக்கும் காரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில் கிஷோர் மணந்துகொண்ட ப்ரீத்தி இந்த குழப்பத்திற்கான விடையைக் கொடுத்துள்ளார்.

கிஷோர் ப்ரீத்தி காதல்

சில காலங்களாகவே கிஷோர் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவரும் ப்ரீத்தி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளார்கள். ப்ரீத்தி கிஷோரை விட வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது காதலை வெளிப்படுத்தினார் கிஷோர். இந்தத் தகவலைப் பகிர்ந்த சில தினங்களிலேயே இவர்கள் இருவரும் தங்களது வீட்டாரது சம்மதத்துடன்  திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

திருமணத்திற்கான காரணம்

யூடியுப் சேனல் ஒன்றிற்கு இந்தப் புதுமணத் தம்பதியினர் அளித்தப் பேட்டி ஒன்றில் தங்களது திருமணம் தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ப்ரீத்தி. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த ப்ரீத்தி “ வயது வித்தியாசம் எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. எனக்கு கிஷோரைப் பிடித்திருக்கிறது அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறது இதற்கு மேல் வயது வித்தியாசம் ஒரு பெரிய பொருட்டாக எங்களுக்குத் தெரியவில்லை “ என அவர் கூறினார்.

மேலும் “ எங்களது திருமணம் திடீரெண்டு நடந்ததால் எங்களால் நிறைய நபர்களை அழைக்க முடியவில்லை. எனது தந்தை சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அவர் ஆசைப்பட்டதால் நாங்கள் இருவரும் இந்தத் திருமணத்தை அவசர அவசரமாக முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனது தந்தையின் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்திருந்தால் நிச்சயமாக இந்தத் திருமணத்தை அனைவரது முன்னிலையிலும் சிறப்பாக நடத்தியிருப்போம் என கூறினார் ப்ரீத்தி. இந்த புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget