மேலும் அறிய

Kamalhasan: 'நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது’ - கமல்ஹாசன் கோரிக்கை

”நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது. ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும்" - கமல்ஹாசன்

கோவை கே.ஜி. திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக திரையரங்க ஊழியர்களுக்கு நினைவு பரிசுகளை கமல்ஹாசன் வழங்கினார். 

ஒடிடி குறித்து முன்பே சொல்லியிருந்தேன்

இதையடுத்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ”சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் என்னை நீ தான் அந்த பிள்ளை என கேட்ட போது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுக்கவில்லை. அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை பீத்திக்கொள்ள முடியாது. ஒடிடி காலகட்டத்தில் பழைய திரையரங்குகளை மல்டி ப்ளேக்ஸ் தியேட்டர்களாக மாற்றி இளைஞர்கள் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒடிடி குறித்து முன்கூட்டியே சொல்லியிருந்தேன். இப்போது வந்துயிருக்கிறது. திரையரங்குளில் உணவகம் வரப்போகிறது. அமெரிக்காவில் வந்துவிட்டது. உணவகமும் தொழில் தான் சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை.

நன்றாக நடிக்கும் நடிகரை வாழ்த்துங்கள்

வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போன்று சினிமாவும் தான். 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துள்ளது. நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது. ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல.  நன்றாக நடிக்கும் நடிகரை வாழ்த்துங்கள். எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும். வட இந்தியாவில் பயப்படுகிறார்கள், தென் சினிமா பக்கம் அனைவரின் பார்வை திரும்பிவிட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன். எனக்கு பிடித்த ஊர் கோவை.

Kamalhasan: 'நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது’ -  கமல்ஹாசன் கோரிக்கை

கோவையில் விக்ரம் க்ளைமேக்ஸ் படம் எடுக்கும் போது எனக்கு கோவிட் வந்து விட்டது. ராஜ்கமல் நிறுவனம் 53 வது படத்தை தயாரித்து வருகிறது. குறைந்த காலக்கட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன். அது பேராசை கிடையாது. பேன், ஏசி வந்தவுடனும், ஏரி கரையில் நடக்குறோம்ல்ல, அந்த மாதிரி தான் சினிமா. சீனாவில் 50 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் உள்ளது. அதைவிட கூட்டம் இங்கு இருக்கு சினிமா வளர அதை நாம் இங்கு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

ரெட் ஜெயிண்ட்  மூலம் பிரச்சனை இல்லை

இதையடுத்து திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்புரமணியம் பேசியதாவது, ”கோவையில் நூறாவது நாள் விழாக்கள் கொண்டாடி 15 வருடங்கள் ஆகியுள்ளது. கமல் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. அவர் வந்தது  மகிழ்ச்சி. நூறு ஆண்டுகள் சினிமா வரலாற்றில் விக்ரம் 2 தான் ரெக்கார்டு ப்ரேக் கலெக்சன் எடுத்துள்ளது. கமல் அரசியலில் இருந்தாலும், எங்கு இருந்தாலும் சினிமா தாம் அவருடைய உயிர் மூச்சு. சினிமாவின் அடுத்தகட்ட பரிமாற்றம் வழி வகுத்தவர் கமல்ஹாசன். திரையரங்குகள் எப்போதும் அழியாது என சொல்லியவர் கமல். அதிநவீன டெக்னாலஜி  தமிழ் சினிமாவில் புகுத்தியவர் கமல்ஹாசன். உலக நாயகன் வார்த்தைக்கு 100 க்கு 200 சதவீதம் பொருத்தமானவர். திரைப்பட வர்த்தகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. கமல்ஹாசன் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Embed widget