மேலும் அறிய

Shivathmika | கோலிவுட்டுக்கு எண்ட்ரி கொடுத்த இன்னொரு வாரிசு நடிகை : இவங்களோட மகளா?

நான் தேடும் செவ்வந்திப் பூவிது.. அந்த நாள் பார்த்து அந்தியில் பூத்தது.. இளையராஜாவின் இசையில் ஜீவிதாவின் அழகு காக்கிச் சட்டையைக் கடந்து நிரம்பி வழியும்.

நான் தேடும் செவ்வந்திப் பூவிது.. அந்த நாள் பார்த்து அந்தியில் பூத்தது.. இளையராஜாவின் இசையில் ஜீவிதாவின் அழகு காக்கிச் சட்டையைக் கடந்து நிரம்பி வழியும்.

1980-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு கட்டிய நடிகை ஜீவிதா. ஜீவிதா பிரபல நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டார். இந்த நட்சத்திர தம்பதியின் மகள் சிவாத்மிகா. இவர் தான் தற்போது தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். தமிழில் ஏற்கெனவே கமல் மகள்கள் அக்‌ஷரா, ஸ்ருதி, ராதா மகள்கள் துளசி, கார்த்திகா, மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் என நிறைய வாரிசு நடிகைகள் நடித்து பெயர் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த வரிசையில் இப்போது சிவாத்மிகா இணைந்திருக்கிறார்.

ஶ்ரீனிதி சாகர் தயாரிக்கும், இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்கிறார். ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.  சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா பாலமுரளி, ரிதுவர்மா ஆகிய மேலும் 2 கதாநாயகிகளும் இதில் நடிக்க உள்ளனர். காதல் தத்தும்பும் இப்படத்தில் சிவாத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார்.

நடிகை ஜீவிதா நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவர் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் கூட தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.சேசு, சத்யமேவ ஜெயதே, எவடந்தே நாகேண்டி, மகாங்களி என 4 தெலுங்குப் படங்களை இயக்கி இருக்கிறார். கலைத்துறையில் தனது பண்முகத்தன்மையை நிரூபித்தவர் ஜீவிதா. இவரது கணவர் ராஜசேகர். இந்த தம்பதியின் அன்யோன்யம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. தனது மனைவி குறித்து, ராஜசேகர் ஒரு பேட்டியில் "என்னோட எல்லா தாழ்வு மனப்பான்மையில இருந்தும் என்னை மீட்டு எடுத்தா. ஜீவிதா பக்கத்துல இருந்தா யானை பலம் வரும் எனக்கு " என சொல்லியிருப்பார். 

அண்மையில், இந்த தம்பதிக்கும் அவர்களின் இரு மகள்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. 4 பேருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டனர். ஜீவிதா ராஜசேகர் குடும்பம் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் என்பது கோலிவுட், டோலிவுட் வட்டாரங்கள் நன்கு அறிந்த செய்தியே. எல்லா திரை விழாக்களிலும் இவர்களை குடும்பத்துடன் பார்க்கலாம். ஜீவிதா குடும்பப் புகைப்படங்கள் ஏராளமாக கூகுளில் காணக்கிடைக்கிறது. ஜீவிதா தனது குடும்பத்தாருடன் கடந்த 2015ல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த புகைப்படம் சற்று பிரபலமானது. இதைவைத்து அவர் அரசியலில் இணையப்போகிறார் என்றெல்லாம் கூட தகவல் வெளியானது.

ஜீவிதாவின் இரண்டு மகள்களுமே அம்மாவைப்போல் திருத்தமான அழகு கொண்டவர்கள்தான். இப்போது, சிவாத்மிகா திரைக்களத்தில் இறங்கியிருக்கிறார். தாய், தந்தையைப் போல் இவரும் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
காதல் தோல்வி சர்ச்சை.. முதல் முறையாக மனம் திறந்த துருவ் விக்ரம்!
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget