மேலும் அறிய

Imran Khan: என் குழந்தையை அடித்தால் கொலை செய்வேன்...பாலிவுட் நடிகர் பேச்சால் சர்ச்சை

தனது மகளை பள்ளியில் ஆசிரியர்கள் அடித்தால் தான் கொலை செய்யக்கூட தூண்டப்படுவேன் என பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இம்ரான் கான்

பாலிவுட் திரையுலகில் 2008ம் ஆண்டு வெளியான 'இல் ஜானே து... யா ஜானே நா' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகர் இம்ரான் கான். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்ற இப்படத்தில் இம்ரான் நடிப்பும் பாராட்டுகளை குவித்தது.

அதன் தொடர்ச்சியாக  ஹேட் லவ் ஸ்டோரிஸ், டெல்லி பெல்லி, மேரே பிரதர் கி துல்ஹான், ஏக் மெயின் அவுர் ஏக் து உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான 'கட்டி பட்டி' படத்தில் நடித்திருந்தார். 

இம்ரான் கான் பர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை பல மன அழுத்தங்களை சந்தித்துள்ளார். 2011ம் ஆண்டு இம்ரான் கான்  - அவந்திகா மாலிக் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. சந்தோஷமாக இருந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

இந்நிலையில் தான் இம்ரான் கானுக்கு நடிகை லேகா வாஷிங்டன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் டேட்டிங் செய்யும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருவரும் காதலித்து வருவதாக வெளிப்படையாக தெரிவித்தனர்.

நடிகை லேகா வாஷிங்டன் கோலிவுட்டில் ஜெயம்கொண்டான், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.  அவர் முதல் மனைவி அவந்திகாவுக்கு பிறந்த பெண் குழந்தை இமாராவை தற்போது இம்ரான் கான் மற்றும் லேகா வாஷிங்டன் இருவரும் சேர்ந்து வளர்த்து  வருகிறார்கள். 

என் குழந்தையை அடித்தால் கொலை செய்வேன்

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் இம்ரான் கான் தன் சின்ன வயதில் தன்னை பள்ளியில் ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தியதைப் பற்றி பேசினார். தொடர்ந்து பேசிய அவர் தன்னை அடித்தது போலவே தனது மகளின் மேல் ஆசிரியர் கை ஓங்கினால் தான் கொலை கூட செய்யத் தூண்டப் படுவேன் என்று இம்ரான் கான் இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானபின் தான் நடிக்கும் படங்களில் தவறான சித்தரிப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் தான் அதிக கவனம் எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
ADMK functionaries JOIN TVK : தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
தள்ளிட்டு வாங்க.. அள்ளிட்டு போங்க. அதிமுகவை காலி செய்ய தவெகவின் ஆடி ஆஃபர்- விஜய்யின் செம பிளான்
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஜூலை 4-ல் இங்கெல்லாம் மின்தடை.. உங்க ஊர் லிஸ்டுல இருக்கா? செக் பண்ணுங்க!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Embed widget