Actor Ganja Karuppu: "மரியாதையா வாரிசு படத்தை தெலுங்குல ரிலீஸ் பண்ணுங்க.." நடிகர் கஞ்சாகருப்பு எச்சரிக்கை..!
நான் தெரியாம கேக்குறேன். இந்த சபரி அய்யப்பா படம் வந்து பெரிய ஹிட் ஆச்சுன்னா நாளைக்கே தெலுங்குக்கு வேணும்னா நாங்க கொடுக்க மாட்டோமா? கொடுக்கத்தானே செய்வோம்.

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை மரியாதையாக தெலுங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என நடிகர் கஞ்சா கருப்பு கோபமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிக்கலில் வாரிசு
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
View this post on Instagram
அலறவிட்ட அறிக்கை
சில தினங்களுக்கு முன் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இதனால் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் வாரிசு படத்துக்கு சிக்கல் எழுந்தது. இந்த அறிக்கைக்கு தமிழ் திரையுலக பிரபலங்களும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
கொந்தளித்த கஞ்சா கருப்பு
அந்த வகையில் நடிகர் கஞ்சா கருப்பும் தனது எதிர்ப்புகளை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக தெரிவித்துள்ளார். அவர் தற்போது ஸ்ரீ சபரி அய்யப்பன் என்ற பக்தி படத்தில் நடித்துள்ளார். இதன் டப்பிங் பணிகளுக்காக வந்த அவர் வாரிசு படத்தின் பிரச்சனை குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அதன்படி நான் தெரியாம கேக்குறேன். இந்த சபரி அய்யப்பா படம் வந்து பெரிய ஹிட் ஆச்சுன்னா நாளைக்கே தெலுங்குக்கு வேணும்னா நாங்க கொடுக்க மாட்டோமா? கொடுக்கத்தானே செய்வோம். நீங்க ஏன் வாரிசு படத்துக்கு தியேட்டர் இல்லன்னு சொல்றீங்க.
உங்க படம் மட்டும் பாகுபலில இருந்து பரதேசிபுலி வரைக்கும் இங்க வந்துருக்கு. எத்தனை தமிழர் காசு போட்டு பார்த்துருப்பான். தியேட்டர் கிடைக்கலன்னு நாளைக்கே நாங்க ஆந்திரால பத்து தியேட்டர் கட்டுனா என்ன பண்ணுவீங்க. என்ன அதிகாரத்துல பேசிட்டு இருக்கீங்க?. அப்படில்லாம் பேச கூடாது. ஆந்திரா மக்கள் ஏன் எங்க படத்தை ஓடக்கூடாதுன்ன்னு சொல்றீங்க?
வாரிசு படத்தை மரியாதையா ரிலீஸ்பண்ணுங்க- ’கஞ்சா’ கருப்பு ஆவேசம்!https://t.co/wupaoCzH82 | #Varisu #TamilNadu #Thalapathy #VarisuPongal #Rashmika #GanjaKaruppu pic.twitter.com/r51xHLUFhL
— ABP Nadu (@abpnadu) November 20, 2022
எங்க இளைய தளபதி விஜய் நடிச்ச வாரிசு படம் எவ்வளவு பெரிய நம்பர் 1 படம். இதைப் பத்தி ஆந்திராவுல ஓட்ட முடியாதுன்னு சொல்றீங்க. இதேமாதிரி ஆந்திராவுல இருந்து ஒரு சூப்பர் ஹீரோ படம் வரும்போது நாங்க தடை பண்ணட்டுமா. அப்படி பண்ணா நீங்க விடுவீங்களா?. தமிழரை தமிழரா மதிங்க. ஒழுங்கா, மரியாதையா விஜய் படத்தை தியேட்டர்ல ஓட்ட வைங்க. ஓட்டணும். அப்படி ஓட்டுணா தான் எங்களுக்கு பெருமை. இல்லன்னா அது வறுமைன்னு சொல்லிட்டு போயிடுவோம் என கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

