தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தளபதி படத்தில் ரஜினியின் சூர்யா கதாபாத்திரத்தின் பெயரை இயக்குநர் வசந்த் தனக்கு வைத்ததாக நடிகர் எஸ் ஜே சூர்யா தெரிவித்துள்ளார்

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்கும் தனது பெயருக்குமான தொடர்பு குறித்து அவர் தெரிவித்துள்ளார். தனது நிஜப் பெயர் ஜஸ்டின் செல்வராஜ் என்றும் இயக்குநர் வசந்திடம் பணியாற்றியபோது அவர் தனது பெயரை சூர்யா என்று மாற்றியதாக எஸ் ஜே சூர்யா பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது குறித்து எஸ் ஜே சூர்யா கூறுகையில் " நான் இயக்குநர் வசந்திடம் பணியாற்றியபோது அவர் என்னுடைய பெயரை கேட்டார். ஜஸ்டின் செல்வராஜ் என்றேன். ஜஸ்டின் என்று ஏற்கனவே ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இருக்கிறார். அவர் பெயரை சொல்லி எப்படி உன்னை கூப்பிடுவது என்றார். எனக்கு பெயர் வைக்க பின் ஒரு பேப்பரில் சில பெயர்களை எழுதிக்கொண்டு வரச்சொன்னார். வசந்த் சாருக்கு மணிரத்னம் சார் படத்தில் இருந்து எதுவென்றாலும் பிடிக்கும். நான் மணிரத்னம் படங்களில் இருந்து ஒவ்வொரு பெயராக எடுத்து அதனை இயக்குநரிடம் கொடுத்தேன். தளபதி படத்தில் ரஜினியின் சூர்யா கதாபாத்திரத்தின் பெயரை எனக்கு வைத்து இனிமேல் இதுதான் உன்னுடைய பெயர் என்றார். ஜஸ்டின் செல்வராஜ் என்கிற நான் எஸ் ஜே சூர்யாவாக மாறியது அப்படிதான்." என்றார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















