Dhanush : தலைவர் தரிசனத்திற்கு தயார்...வேட்டையன் FDFS பார்க்கப்போகிறார் தனுஷ்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்பட்ம இன்று வெளியாகி இருக்கும் நிலையில் படத்தைப் பற்றி நடிகர் தனுஷின் எக்ஸ் தள பதிவு வைராகி வருகிறது
வேட்டையன்
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகிறது. வெளிநாடுகளில் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகள் முடிந்து ஏற்கனவே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் காட்சி அதிகாலை 9 மணிக்கு துவங்கி இருக்கிறது. வேட்டையன் படத்தை முன்னிட்டு பல்வேறு தனியார் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து படத்திற்கான டிக்கெட்களையும் வழங்கியுள்ளது. ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமில்லை தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களை இன்று திரையரங்குகளில் பார்க்கலாம். ரஜினியின் தீவிர ரசிகர்களான நெல்சன் , லோகேஷ் கனகராஜ் , கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இயக்குநர்கள் ரஜினி படத்தை முதல் நாளிலேயே பார்த்துவிடுவது வழக்கம்.
'தலைவர் தரிசனம்' - தனுஷ் டவீட்
Dhanush watching #Vettaiyan💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 10, 2024
pic.twitter.com/d6rz24bWH9
ரஜினி குடும்பத்தில் அவருடை மற்றொரு மிகப்பெரிய ரசிகர் நடிகர் தனுஷ். தனது இளமைக் காலத்தில் ரஜினி இருக்கும் வீட்டை பார்க்க போராடியவர் தனுஷ். ஒவ்வொரு வருடமும் ரஜினி படங்கள் வெளியாகையில் முதல் நாள் தனது மகன்களுடன் படத்தை பார்த்து வருகிறார். அதேபோல் இந்த முறையும் சென்னை ரோகிணி திரையரங்கில் தனுஷ் வேட்டையன் படம் பார்க்க சென்றுள்ளார்.
#vettaiyan DAY ! #superstar .. Thalaivar dharisanam
— Dhanush (@dhanushkraja) October 10, 2024