Dhanush : லண்டனில் கொலைவெறியோடு காத்திருந்த ரசிகர்கள்...பாட்டு பாடி ஆஃப் செய்த தனுஷ்
லண்டனில் தன்னை பார்க்க கூடியிருந்த ரசிகர்களுக்காக நடிகர் தனுஷ் "உசுரே நீ தானே ' வரிகளை பாடி நன்றி தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
தனுஷ்
தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு , ஹாலிவுட் வரை ரசிகர்களைக் கொண்டுள்ளார் தனுஷ். இந்தியில் ராஞ்சனா , ஷபிதாப் . தெலுங்கில் வாத்தி படத்தின் மூலம் பரவலாக கவனம் பெற்றார். தனுஷின் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் அவரை பிரபலமாக்கியது. மேலும் ஹாலிவுட்டில் வெளியான The Extraordinary Journey Of fakir , Grey man ஆகிய படங்களில் தனுஷ் நடித்து சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
தனுஷ் சமீபத்தில் ரெஸ்டாரன் திறப்பு விழாவுக்காக லண்டன் சென்றுள்ளார். க்ளீன் ஷேவ் செய்து மறுபடியும் 18 வயது சிறுவன் போல் தோன்று தனுஷின் தோற்றம் பேசுபொருளாகியுள்ளது. லண்டனில் தனுஷைப் பார்க்க தமிழ் மற்றும் பிற மொழி பேசுபவர்களும் என ஒரு பெரிய கூட்டம் திரண்டது. நாங்கள் வெறித்தனமான ரசிகர்கள் இல்லை கொலை வெறித்தனமான ரசிகர்கள் என அவர்கள் தனுஷிடன் தெரிவித்தனர்.
ரசிகர்களுக்காக பாடிய தனுஷ்
தன்னைப் பார்க்க கூடியிருந்த ரசிகரகளுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்தார் பின் ராயன் படத்தின் அடங்காத அசுரன் பாடலில் இருந்து உசுரே நீ தானே என்கிற வரியை அவர் பாடினார். அதை கேட்டதும் ரசிகர்கள் ஆர்பரித்தனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
National ❌
— Chowdrey (@Chowdrey_) December 8, 2024
International ✔️@dhanushkraja 🗿🐐 #Dhanush pic.twitter.com/C7LNElRLKp
தனுஷ் படங்கள்
தனுஷ் நடித்துள்ள குபேரா படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இரு படங்களை தனுஷ் இயக்கியுள்ளார். இரு படங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன. அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பேசுபொருளாக இருந்து வருகிறார் தனுஷ். நயன்தாரா உடனான என்.ஓ.சி சர்ச்சை , மனைவி ஐஸ்வர்யாவுடனான விவாகரத்து என தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர் சவால்களை கொண்டுள்ளது. இதை எல்லாம் ஆர்பாட்டமே இல்லாமல் சைலண்டாக டீல் செய்து வருகிறார் தனுஷ். இதனிடையில் திருச்சிற்றம்பலம் படத்திற்காக தனுஷூக்கு நியூஸ் 18 சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கெளரவித்தது.