Captain Miller Leaked: இணையத்தில் வெளியானது கேப்டன் மில்லர்.. தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி..!
Captain Miller Leaked: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
Dhanush Captain Miller Leaked: நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள நிலையில் தியேட்டரில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் “கேப்டன் மில்லர்” (Captain Miller). சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள கேப்டன் மில்லர் படம் தனுஷின் 49வது படமாகும். கடந்த ஓராண்டாகவே கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.
Showtime: #CaptainMiller 🔥💯
— 𝐀𝐥𝐥𝐚𝐫𝐢 𝐑𝐚𝐦𝐮𝐝𝐮 𝐍𝐓𝐑 (@AllariRamuduNTR) January 12, 2024
Best Wishes #Mappillai @dhanushkraja pic.twitter.com/yJY5gTJoiU
இதனிடையே கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதில் படக்குழுவின் அயராத உழைப்பு ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் மூலம் தெரிய வந்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வந்தனர். இதனிடையே தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ் தவிர்த்து இந்தி மற்றும் கன்னடத்தில் வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் படத்துக்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
3 years of sweat, blood and sacrifice from my team to you all. Captain Miller from today 🙏🏻🙏🏻. OM NAMASHIVAYAA ♥️♥️ pic.twitter.com/OtIoE3Dgtv
— Dhanush (@dhanushkraja) January 11, 2024
குறிப்பாக கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் இந்த படத்தில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதல் தியேட்டரில் காலை முதல் காட்சி பார்க்க குவிந்தனர். உள்ளே சென்ற அவர்கள் படத்தில் இடம் பெற்ற முக்கிய காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதால் படக்குழுவினர் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள தனுஷ் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து விடும் எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம் இதுபோன்ற வீடியோக்களை நீக்குவது தொடர்பான நடவடிக்கையும் படக்குழு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் ஒருநாள் முன்னதாகவே அமெரிக்காவில் வெளியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.