மேலும் அறிய

Dhanush 50: தனுஷின் 50-வது படம்... முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். ஒல்லியான தேகம், அப்பாவியான முகத்தோற்றம் என அறிமுகமான அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் கிண்டலடித்தனர். அவற்றிற்கெல்லாம் பதிலடியாக தனது நடிப்பின் மூலம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் கவர தொடங்கினார் தனுஷ். இயக்குநரான அண்ணன் செல்வராகவன் தனுஷை பார்த்து பார்த்து பட்டை தீட்டினார். 

தனக்கென தனிபாதை அமைத்து கொண்ட தனுஷ் நடிப்பை தொடர்ந்து இயக்கம், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து பல பரிணாமங்களை தொட்டார். தனுஷின் வளர்ச்சி அவரை பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் நடிப்பதற்கு அழைப்பு வர காரணமாக அமைந்தது. 2 ஹாலிவுட் படங்களில் நடித்த அவர் தேசிய விருது தொடங்கி தமிழ் சினிமாவில் கிட்டதட்ட அனைத்து விருதுகளையும் பெற்று விட்டார். 

View this post on Instagram
 
A post shared by Sun Pictures (@sunpictures)

இதனிடையே கடந்தாண்டு மட்டும் தனுஷ் நடிப்பில் 4 படம் வெளியானது. ஓடிடியில் மாறன் படம் வெளியான நிலையில், திருச்சிற்றம்பலம் படம் தனுஷின் ஹிட் பட வரிசையில் ஒன்றாக மாறியது. தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த நானே வருவேன் ரிலீஸாகி,  தனுஷின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் தனுஷ் மும்முரமாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் இதுவரை 49 படங்களில் நடித்துள்ள தனுஷின் 50 வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் இயக்குநர் மற்றும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக மீண்டும் தனுஷ் இயக்கத்தில் இறங்கவுள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது. 

அதனால் 50 வது படத்தின் இயக்குநர் தனுஷ் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் துணிவு பட இயக்குநர் தனுஷூக்கு தான் கதை சொன்னதாகவும் தெரிவித்திருந்தார். ஒருவேளை ஹெச்.வினோத் படமா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Embed widget