மேலும் அறிய

வாய்ப்பு கேட்க போன இடத்திலும் சண்டை.. நடிகர் பரணி வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவமா?

உதவி இயக்குநராக சேர வந்துள்ளேன் என கூறினேன்.  அந்த வேலை இல்லை என சொல்லி என்னை போக சொன்னார்கள். படியை விட்டு கீழே இறங்கும்போது எந்த ஊரு என கேட்க, மதுரை என்று சொன்னேன்.

இயக்குநராக ஆசைப்பட்ட தான் எப்படி நடிகராக  மாறினேன் என்பதை நடிகர் பரணி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

கல்லூரி படம் மூலம் நடிகராக அறியப்பட்ட பரணி, அதன்பிறகு நாடோடிகள், நேற்று இன்று, தூங்கா நகரம், பொட்டு, நாடோடிகள் 2, தெற்கத்தி வீரன் சில பல படங்களில் நடித்தார். 2017ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் நேர்காணலில் பேசிய பரணி, “நான் இயக்குநராக வர வேண்டும் என ஆசைப்பட்டேன். 5ம் வகுப்பு படிக்கும்போது இருந்தே கதை எழுதி வந்தேன். டி.ராஜேந்தர் அவரது படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லாம் அவரே மேற்கொள்வார். அதனைப் பார்த்து தமிழ் புத்தகத்தில் அப்படி எழுதி பார்த்தேன். நான் படிக்கவில்லை ஆசிரியர் என் அப்பாவிடம் கூறி அந்த புத்தகத்தைக் காட்ட சாப்பிடும்போது குழம்பு கரண்டியால் அடிவாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. 

காலப்போக்கில் நல்ல கதை ஒன்றை எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஒருமுறை கல்லூரி படத்தின் ஆடிஷன் போய்க் கொண்டிருந்தது. ஷங்கர் அந்த படத்தை தயாரித்தார். அவரின் அலுவலகத்தில் உறவினர் ஒருவர் ஆடிட்டராக இருந்தார். அவங்க தான் என்னிடம் நீ கதை சொல்லிட்டே இருக்கியே, ஷங்கர் அலுவலகத்தில் போய் பாரு என சொன்னார். நானும் போனேன். அப்போது ஷங்கர் தயாரித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் அடுத்தப்படமாக கல்லூரி எடுக்க பாலாஜி சக்திவேல் முடிவு செய்திருந்தார். நான் அவரின் அலுவலகத்துக்கு சென்றதும், அங்கிருந்த அவர் எதுக்கு வந்துருக்கீங்க என கேட்டார். நான் இயக்குநராக வேண்டும் என முடிவு செய்துள்ளேன். 

 உதவி இயக்குநராக சேர வந்துள்ளேன் என கூறினேன்.  அந்த வேலை இல்லை என சொல்லி என்னை போக சொன்னார்கள். படியை விட்டு கீழே இறங்கும்போது எந்த ஊரு என கேட்க, மதுரை என்று சொன்னேன். மதுரைக்காரங்க எல்லாரும் சும்மா வாய் பேச்சு தான் என அவர் சொல்ல நான் மறுபடியும் மேலேறி போய் சண்டை போட்டேன். உதவி இயக்குநராக வேலை இல்லை என்றால் விடுங்கள், அதனை விடுத்து இப்படியெல்லாம் பேசாதீங்க என எங்களுக்குள் வாக்குவாதம் சென்றது. 

தொடர்ந்து நான் நடித்து காட்டுகிறேன் என ஒரு காட்சியை பேசினேன். அதனை எனக்கே தெரியாமல் கேமராவில் வீடியோ எடுத்து பாலாஜி சக்திவேலிடம் காட்டினார்கள். அதன்பிறகு ஒரு 10 பேரை நான் நடித்த கேரக்டருக்காக தேர்வு செய்து காட்சியை சொல்வார்கள். இப்படியாக ஒரு வருடம் சென்று விட்டது. இருந்தாலும் நான் இந்த கேரக்டரில் நடிக்கிறேனா இல்லையா என்பதே தெரியாமல் இருந்தது.

அதன்பிறகு லாரன்ஸ் மாஸ்டரின் உதவியாளர் ஒருவர் எஸ் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் என்னை ஆபீஸ் பாய் என நினைத்து கேட்க, என்னை கைகாட்டி அந்த பையன் தான் செகண்ட் ஹீரோயினாக நடிக்கிறான் என கூறவும் தான் நான் இந்த படத்தில் இருப்பதே எனக்கு தெரிந்தது. 

ஒளிப்பதிவாளர் செழியன் என்னிடம் பேசும்போது, பசி தாங்கி உதவி இயக்குநராக மாறப் போகிறாயா அல்லது நன்றாக சாப்பிட்டு நடிக்கப் போகிறாயா என கேட்டார். நான் உடனேயே, என்னால் பசிதாங்க முடியாது. நான் நடிக்கிறேன் என கூறினேன். சிவகங்கையில் முதல் நாள் ஷூட்டிங்கில் சொதப்பி விட்டேன். உன்னை நம்பி தாண்டா படம் முழுக்க பக்கம் பக்கமாக டயலாக் எழுதியிக்கேன் என பாலாஜி சக்திவேல் கூறினார். கல்லூரி படம் முடிந்து தேவி தியேட்டரில் இருந்து வெளியே வந்ததும் தூக்கி கொண்டாடினார்கள்” என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget