மனோஜ் இல்லாமல் கலையிழந்து போன பாரதிராஜா...போன பிறந்தநாளில் எவ்வளவு சந்தோஷமா இருந்தார் பாருங்க
Bharathiraja Birthday : தனது மகன் மனோஜின் இறப்புக்குப் பின் இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று தனது 84 ஆவது பிறந்தநாளைக் தனியாக கொண்டாடுகிறார்

இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள்
இயக்குநர் இமயம் என ரசிகர்களால் கொண்டாடப்ப்படும் பாரதிராஜா இன்று தனது 84 ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார் பாரதிராஜா. இந்திய கிராமிய நிலப்பரப்பையும் , எண்ணற்ற மனிதர்களையும் தனது கதைகளில் கொண்டுவந்தார். 45 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 46 திரைப்படங்களை இயக்கியும் 26 திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழ் திரையுலகினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தனது மகன் மனோஜின் இறப்புக்குப் பின் பாரதிராஜா முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த ஆண்டு தனது மகன் மகளோடு அவர் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
மகனைப் பிரிந்து தவிக்கும் பாரதிராஜா
பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த தனது மகனைப் பார்த்து பாரதிராஜா கதறி அழுத காட்சி பார்ப்போரை கலங்கடித்தது. மகனின் இறப்பைத் தொடர்ந்து பாரதிராஜா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நொடிந்து போனார். கடந்த ஆண்டு தனது பிறந்த நாளை மகன் மற்றும் மகளுடன் கொண்டாடிய பாரதிராஜா இந்த ஆண்டு தனது மகனை இழந்து நிற்கிறார்.
மகனுடன் மகிழ்ச்சியாய் பாரதிராஜா கடைசி Birthday Video#viralvideo #barathiraja #manoj #birthday #abpnadu pic.twitter.com/kcZDjFgEYt
— ABP Nadu (@abpnadu) March 26, 2025
மனோஜ் பாரதிராஜா
பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் நாயகனாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானர் மனோஜ். இப்படத்தைத் தொடர்ந்து 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தில் நடித்தார் மனோஜ். இப்படத்தில் எளிமையான கதாபாத்திரமும் இயல்பான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தடுத்து வந்த படங்களும் பெரியளவில் வெற்றிபெறவில்லை.





















