மேலும் அறிய

Mankatha Re- Release: வெறிகொண்டு காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்.. மங்காத்தா டிக்கெட் முன்பதிவில் சாதனை!

மங்காத்தா படத்துக்குப் பின் அஜித் 12 படங்கள் நடித்து விட்டாலும், அதுதான் என்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவே உள்ளது. அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள மங்காத்தா படம் ரீ-ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படம் டிக்கெட் முன்பதிவில் சாதனைப் படைத்து வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அஜித்தின் 50வது படம்

கடந்த 2011ம் ஆண்டு நடிகர் அஜித்குமாரின் 50வது படமாக வெளியானது “மங்காத்தா”. கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்த இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அர்ஜூன், ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி அமரன், மஹத், லட்சுமி ராய், அஸ்வின், அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ் என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். 

வழக்கமாக ஹீரோவாக தொடர்ந்து நடித்து வந்த அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மங்காத்தா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் இந்த படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. படத்தின் சுவாரஸ்யமான கதை, அஜித்தின் ஆக்ரோஷமான நடிப்பு என கடந்த 15 ஆண்டுகளில் அஜித்துக்கு அப்படி ஒரு படம் மீண்டும் அமையவில்லை என்றே சொல்லலாம். 

மீண்டும் ரீ-ரிலீஸ்

இந்த நிலையில் அஜித் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த படங்கள் அவ்வப்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ரீ-ரிலீஸ் ஒரு ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில் அஜித்தின் மங்காத்தா படம் வெளியிடப்பட உள்ளதாக டிசம்பர் கடைசியில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் ஜனவரி 23ம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த படத்துக்காக எடிட் செய்யப்பட்ட ட்ரெய்லர் தொடங்கி புது ப்ரோமோக்களும் வெளியானது. 

டிக்கெட் முன்பதிவில் சாதனை

இந்த நிலையில் மங்காத்தா பட ரீ-ரிலீஸுக்கான டிக்கெட் முன்பதிவு முழுவீச்சில் நடந்து வருகிறது. என்னதான் அந்த படத்துக்குப் பின் அஜித் 12 படங்கள் நடித்து விட்டாலும், மங்காத்தா என்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவே உள்ளது. இதனால் ரீ-ரிலீஸ் அறிவிக்கப்பட்டது ஏதோ புது படம் வெளியாவது போல போட்டிப் போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை பெற்றுச் செல்கிறார்கள். 

ஜனவரி 23 வெள்ளிக்கிழமை, 24ம் தேதி சனிக்கிழமை, 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 26ம் தேதி குடியரசு தினம் விடுமுறை என 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து வருகிறது. சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அதேபோல் பிற ஊர்களிலும் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எப்படியாவது ரீ-ரிலீஸில் சாதனை படைக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget