Watch Video : அலெக்ஸா ப்ளே விடாமுயற்சி சாங்...200 கிமீ வேகத்தில் பறந்த அஜித் குமார்
Ajith Racing Video : 200 கிமீ வேகத்தில் நடிகர் அஜித் குமார் காரை ஓட்டிச்செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஐரோப்பிய GT4 கார் பந்தையங்களில் போட்டியிட்டு வரும் அஜித் மற்றும் அவரது அணி சர்வதேச அளவில் கவனமீர்த்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள அஜித்திற்கு ரசிகர்களுக்கு கொடுத்த வரவேற்பு இந்த போட்டியினை மேலும் பரவான ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்துள்ளது. அஜித் ஒவ்வொரு முறையும் விபத்திற்குள்ளாகி மறுபடியும் ரேஸ் டிராக்கிற்கு திரும்புவதை ரசிகர்கள் பரவலாக ஷேர் செய்துகொள்கிறார்கள். அந்த வகையில் அஜித் அதிவேகமாக கார் ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
அஜித் ரேஸிங் விடியோ வைரல்
இந்த ரேஸிங் வீடியோக்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்துள்ளன. அந்த வகையில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் அஜித் காரை ஓட்டிச்செல்லும் முன்பு வெளியான வீடியோ தர்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Ajith Kumar FULL SPEED RACING VIDEO!😎🔥Is this possible-aa!? 😯🔥
— nallurwood (@nallurwood) August 22, 2025
#AjithKumar #AK64 #GoodBadUgly pic.twitter.com/NrKM9nQ2Cr
AK64
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இப்படத்திற்கான முன்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. லப்பர் பந்து ஸ்வாசிகா , கேஜி.எப் ஶ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக அஜித்தை கொண்டாடும் விதமாக இருந்தாலும் தனது அடுத்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக கமர்சியல் என்டர்டெயினராக இருக்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்கள். தூத்துக்குடியை மையப்படுத்திய கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் இருக்கும். நவம்பர் மாதம் முதல் அஜித் படப்பிடிப்பிற்கு இந்தியா திரும்ப இருக்கிறார்.





















