மேலும் அறிய

Aamir Khan | மகளாக நடித்த நடிகையுடன் மூன்றாவது திருமணம் செய்யும் அமீர்கான்?

'தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படத்தின் போதுதான் ஆமிர்கானுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பிரபலமான ’கான்’ நடிகர்களுள் ஒருவர் ஆமிர்கான் . இவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஆமிர்கான் கடந்த 2002 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் தன்னுடன் லகான் திரைப்படத்தில் பணியாற்றிய , உதவி இயக்குநரான கிரண் ராவை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம்  செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இருவரும் 15 ஆண்டுகால மண வாழ்க்கையில் இருந்து பிரிய இருப்பதாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் “நாங்கள் ஒன்றாக இருந்த காலக்கட்டத்தில், ஒருவருக்கு ஒரு அன்பாகவும், மரியாதையுடனும் இருந்தோம், கணவன் மனைவி உறவில் இருந்து பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்து எங்கள் மகனை வளர்போம், அவனுக்கு சிறந்த பெற்றோராகவும் எங்கள் கடமைகளை நிறைவேற்றுவோம், எங்கள் முடிவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம் “ என குறிப்பிட்டிருந்தனர். 

Aamir Khan | மகளாக நடித்த நடிகையுடன் மூன்றாவது திருமணம் செய்யும் அமீர்கான்?
இந்த செய்தி வெளியாகிய அடுத்த நாள் முதலே பாலிவுட்டின் பிரபல நடிகை பாத்திமா சனா ஷேக்தான் விவாகரத்திற்கு காரணம் என ட்விட்டரில் நெட்டிசன்கள் பேசத்தொடங்கிவிட்டனர். பாத்திமா சனா ஷேக்குடன் ஆமிர்கான் நெருங்கி பழகியது பிடிக்காமல்தான்  கிரண் ராவ் விவாகரத்து பெற்றதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கத்தொடங்கினர்.  

தங்கல் திரைப்படத்தில் அமீர்கானுக்கு மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக்.இந்த படத்திற்கு பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’  திரைப்படத்திலும் ஆமிர்கானுடன் நடித்திருந்தார். நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான ‘லூடோ’ என்ற வெப் சீரிஸில் ஒரு குழந்தைக்கு தாயாக , வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார் பாத்திமா சனா ஷேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

Aamir Khan | மகளாக நடித்த நடிகையுடன் மூன்றாவது திருமணம் செய்யும் அமீர்கான்?

 'தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ படத்தின் போதுதான் ஆமிர்கானுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பாத்திமா சனா ஷேக்கிற்கு தற்போது 29 வயதாகும் நிலையில்  59 வயதாகும் ஆமிர்கானை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பும் செய்து வருகிறார்களாம் . விரைவில் இது குறித்த அறிவிப்பை பொதுவெளியில் கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆமிர்கான் விவாகரத்திற்கு பிறகு உடனடியாக மூன்றாவது திருமணத்தில் முனைப்பு காட்டுவது  அவரது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. பாத்திமா சனா ஷேக் மற்றும் ஆமிர்கான் ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. எது எப்படியோ இருவரில் யாராவது ஒருவர் மௌனம் கலைத்தால் மட்டுமே , உண்மை என்ன என்பது ரசிகர்களுக்கு உறுதிபட தெரியவரும். 

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget