மேலும் அறிய

A.R Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பெருமைப்பட வைத்த இரண்டாவது மகள்.. இசைப்புயலின் உணர்ச்சிகரப் பதிவு!

A.R. Rahman Daughter: மகள் ரஹீமா ரஹ்மான் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் உச்சபட்ச மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இசைப்புயல் எனக் கொண்டாடப்படும் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) தன்னுடைய தனித்துவமான இசையால் சர்வதேச அளவில் பிரபலமானவர். உலகெங்கிலும் அவருக்கு கோடான கோடி ரசிகர் பெருமக்கள் உள்ளனர். விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்தவருக்கு சினிமாவில் அறிமுகம் கொடுத்தது 'ரோஜா' திரைப்படம். முதல் படத்திலேயே வித்தியாசமான இசை மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர். 

A.R Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பெருமைப்பட வைத்த இரண்டாவது மகள்.. இசைப்புயலின் உணர்ச்சிகரப் பதிவு!

தமிழ் மட்டுமின்றி அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகளுக்கும் இசையமைத்துள்ளார். "ஸ்லம்டாக் மில்லியனர்” படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவை பெருமைப்படுத்தினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏ.ஆர். ரஹ்மான் இசைத்துறையில் கோலோச்சி வரும் நிலையில், அவரது மகள்  இசையைத் தாண்டி வேறு ஒரு துறையில் சாதனை செய்துள்ளார். 

A.R Rahman: ஏ.ஆர்.ரஹ்மானை பெருமைப்பட வைத்த இரண்டாவது மகள்.. இசைப்புயலின் உணர்ச்சிகரப் பதிவு!

ஏ.ஆர். ரஹ்மான் - ஷெரினா பானு திருமணம் 1995ஆம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஏற்கெனவே ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா மற்றும் அமீன் ஆகிய இருவரும் தந்தையின் வழியே இசைத்துறையில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் கலக்கி வருகிறார்கள். மகள் கதீஜா எந்திரன், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். மேலும் சர்வதேச படமான 'லயன்ஸ்' படத்திற்கு இசையமைத்துள்ளார். மகன் அமீன் 'ஓ காதல் கண்மணி', 'தில் பேச்சாரா' உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by ARR (@arrahman)

இந்த இசைக் குடும்பத்தில் மற்றொரு வாரிசான ஏ.ஆர். ரஹ்மானின் இரண்டாவது மகள் ரஹீமா இசையில் இருந்து விலகி சமையல் துறையில் சாதித்து செஃப் பட்டத்தை பெற்றுள்ளார். துபாயில் கேட்டரிங் படிப்பு மேற்கொண்டு வந்த ரஹீமா தன்னுடைய படிப்பை முடித்துள்ளார். மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் பெருமிதத்துடன் "நான் என் மகளை நினைத்து பெருமை அடைகிறேன்" என தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த பதிவுக்கு லைக்ஸ்களை சரமாரியாக குவித்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராஷ்மிகா மாதிரி பொண்டாட்டி இருக்க.. த்ரிஷா கேக்குதா? - விஜயை விமர்சித்து வசனம் - வைரல் வீடியோ!
ராஷ்மிகா மாதிரி பொண்டாட்டி இருக்க.. த்ரிஷா கேக்குதா? - விஜயை விமர்சித்து வசனம் - வைரல் வீடியோ!
நயன்தாராவுக்காக ஓடோடி வந்த நடிகர் சங்கம்... கொந்தளிக்கும் த்ரிஷா ரசிகர்கள்!
நயன்தாராவுக்காக ஓடோடி வந்த நடிகர் சங்கம்... கொந்தளிக்கும் த்ரிஷா ரசிகர்கள்!
R Parthiban: ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்பல.. கஷ்டமா இருக்கு.. பார்த்திபன் வருத்தம்!
R Parthiban: ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்பல.. கஷ்டமா இருக்கு.. பார்த்திபன் வருத்தம்!
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Jewellery Pawning Regulation : நகைகளை அடகு வைக்கவோ, மீட்கவோ செக்.! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு- என்ன தெரியுமா.?
நகைகளை அடகு வைக்கவோ, மீட்கவோ செக்.! புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு- என்ன தெரியுமா.?
அப்பாடா .. ஒரு வழியா முடிந்தது.! திமுக- இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு.! எத்தனை தொகுதி.?
அப்பாடா .. ஒரு வழியா முடிந்தது.! திமுக- இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு.! எத்தனை தொகுதி.?
North Korea Election 2026: கிம் ஜாங் உன்னுக்கே பயப்படலையா.! வட கொரியா தேர்தலில் எதிராக இத்தனை சதவீத வாக்களிப்பா.?!
கிம் ஜாங் உன்னுக்கே பயப்படலையா.! வட கொரியா தேர்தலில் எதிராக இத்தனை சதவீத வாக்களிப்பா.?!
5 ஆண்டுகளில் வெறும் 5 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: இதெல்லாம் அடுக்குமா? குமுறும் தேர்வர்கள்!
5 ஆண்டுகளில் வெறும் 5 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: இதெல்லாம் அடுக்குமா? குமுறும் தேர்வர்கள்!
RCB Bid: ஆர்சிபி யாருக்கு? 2 பில்லியனை தாண்டிய ப்ரைஸ் டேக், ஸ்வீடன் Vs அமெரிக்கா? ரெண்டே பேருக்கு தான் போட்டி
RCB Bid: ஆர்சிபி யாருக்கு? 2 பில்லியனை தாண்டிய ப்ரைஸ் டேக், ஸ்வீடன் Vs அமெரிக்கா? ரெண்டே பேருக்கு தான் போட்டி
Guerrilla 450 Vs Triumph 400 Vs Duke 390: கொரில்லா, ட்ரையம்ப் ஸ்பீட், ட்யூக்; இந்த பவர்ஃபுல் பைக்குகள்லயே பவர்ஃபுல் எதுன்னு தெரியனுமா.? இத படிங்க
கொரில்லா, ட்ரையம்ப் ஸ்பீட், ட்யூக்; இந்த பவர்ஃபுல் பைக்குகள்லயே பவர்ஃபுல் எதுன்னு தெரியனுமா.? இத படிங்க
Skoda Slavia: ஸ்கோடா ஸ்லாவியா சோபிக்காதது ஏன்? என்ன இல்லை? போட்டி எஸ்யுவிக்கள் அடித்து நொறுக்கியது எப்படி?
Skoda Slavia: ஸ்கோடா ஸ்லாவியா சோபிக்காதது ஏன்? என்ன இல்லை? போட்டி எஸ்யுவிக்கள் அடித்து நொறுக்கியது எப்படி?
Voting Documents List: வாக்காளர் அடையாள அட்டை இல்லையா.! ஓட்டு போட இந்த 12 ஐடி கார்டு கட்டாயம்.? தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா.! ஓட்டு போட இந்த 12 ஐடி கார்டு கட்டாயம்.? தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு
Embed widget