மேலும் அறிய

49 years of Thanga pathakkam: கம்பீரம்.. கண்டிப்பு.. நேர்மை..! நடிகர் திலகத்தின் 'தங்கப்பதக்கம்' 49 ஆண்டுகள் நிறைவு..!

தங்கம் என்றால் தரத்தில் சற்றும் குறைவில்லாத கலப்படமில்லாத தங்கமாக விளங்கும் 'தங்கப்பதக்கம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 49 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

பழம்பெரும் இயக்குனர் பி. மாதவன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடிப்பில் 1974ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் 'தங்கப்பதக்கம்'. படம் வெளியாகி 49 ஆண்டுகளை கடந்தும் இன்றும் தங்கம் என்றால் தரத்தில் சற்றும் குறைவில்லாத கலப்படமில்லாத தங்கமாக விளங்குகிறது 'தங்கப்பதக்கம்' திரைப்படம். அந்த அளவிற்கு சொக்கத் தங்கமாக இருந்தது சிவாஜி கணேசனின் மிடுக்கான நடிப்பு.  

கடமை தவறாத போலீஸ் அதிகாரி:

போலீஸ் அதிகாரி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நிஜ போலீசையே மிஞ்சிய ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி. அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் அவரின் கம்பீரமான தோற்றம், கண்டிப்பு, அவரின் கடமை மீது இருக்கும் மரியாதையை மிக அழகாக உணர்ச்சிகரமாக நடித்து இருந்தார். கடமை தவறாத ஒரு கண்ணியமான போலீஸ் அதிகாரிக்கு மனைவியாக எப்படி ஒரு குணவதியாக மனைவி அமைவது பொருத்தமாக இருக்குமோ அப்படி சித்தரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் கே. ஆர். விஜயா. 

49 years of Thanga pathakkam: கம்பீரம்.. கண்டிப்பு.. நேர்மை..! நடிகர் திலகத்தின் 'தங்கப்பதக்கம்' 49 ஆண்டுகள் நிறைவு..!

அவமானப்படுத்தும் மகன் :

சிவாஜி கணேசன் - கே.ஆர். விஜயா தம்பதியின் மகனாக ஸ்ரீகாந்த் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்பாவை அவமான படுத்தி பேசும் காட்சிகளில் இரக்கமின்றி அவர் பேசினாலும்  தனக்கு கிடைத்த வாய்ப்பை சாமர்த்தியமாக பயன்படுத்தி கொண்டார். நடிகர் சோ கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திலும் கவுன்சிலர் கதாபாத்திரத்திலும் அவ்வப்போது வந்து போனார். 

ஒரு ஒழுக்கமான போலீஸ் அதிகாரியாக தனது மகன் மீது காட்டும் கண்டிப்பு அவனை அவருக்கு எதிரான வெறுப்பை சம்பாதித்து கருத்து வேறுபாட்டை உண்டாகும் இடங்களில் இருவரும் மிகவும் நேர்த்தியாக யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் அந்த வெறுப்பு பின்னாளில் தந்தையை பழிவாங்கும் அளவிற்கு கதையை நகர்த்தியது படத்தின் பலத்தை சற்று குறைத்தது. 

வசூலில் சாதனை :

தங்கப்பதக்கம் படம் வெளியான காலகட்டத்தில் அதிகம் வசூலித்த திரைப்படமாக சாதனை படைத்தது. திரையரங்குகள் எங்கும் காட்சிகள் வழிந்தோடியது. படம் ஐந்து லட்சத்திற்கு மேல் வசூலித்து தூள் கிளப்பியது. எம்.ஜி.ஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் ஒரு பக்கம் திருவிழா கோலம் போல காட்சியளித்த திரையரங்குகளை பார்த்த சிவாஜி கணேசன் ரசிகர்கள் மலைத்து போக அப்படம் ஓடி தீர்ந்த பிறகு அடுத்து பட்டையை கிளப்ப தயாரானது சிவாஜி கணேசனின் 'தங்கப்பதக்கம்' திரைப்படம். சிவாஜியின் திரைப்பயணத்தில் தங்கப்பதக்கத்தை பெற்று தந்தது இப்படம் என்றால் அது மிகையல்ல. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
Trump: அதிபராக பதவியேற்றார் டிரம்ப்: டாப் 5 முதல் நடவடிக்கைகள் என்ன? மோடியுடன் நட்பு தொடருமா?
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
Embed widget