மேலும் அறிய

31 Years Of AjithKumar: 'பண்டிகையை கொண்டாடு’ .. திரைத்துறையில் 31 ஆண்டுகள்.. அஜித்துக்கு காமன் டிபி வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் திரைத்துறையில் 31 ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் திரைத்துறையில் 31 ஆண்டில் அடியெடுத்து வைப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

1971 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி  ஹைதராபாத்தில் பிறந்த அஜித் சென்னை மற்றும் ஆந்திராவில் பள்ளிப் படிப்பை முடித்தார். உயர்கல்வி படிக்காத நிலையில் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை, பைக் மெக்கானிக், டெக்ஸ்டைல் பிசினஸ் என பலவிதமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். ஆனால் மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்த அஜித்துக்கு சினிமாவில் பயணம் செய்யும் வாய்ப்பு அமைந்தது. 

1990 ஆம் ஆண்டு  சுரேஷ் - நதியா நடித்த 'என் வீடு என் கணவர்' படத்தில் ஒரு பள்ளி மாணவராக அஜித் நடித்திருந்தார். ஆனால் 1993 ஆம் ஆண்டு அஜித் ஹீரோவானார். அது தமிழில் இல்லை தெலுங்கில் வெளியான ‘பிரேம புஸ்தகம்’ படத்தில் தான். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் தமிழில் ‘அமராவதி’ படத்தில் ஹீரோவாக எண்ட்ரீ கொடுத்தார். பின்னாளில் அஜித் தமிழ் சினிமாவில் தான் முன்னணி நடிகராக இருப்போம் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். 

ஆனால் ரசிகர்கள் அவரை முதலில் ஏற்றுக் கொண்டனர். பின்னர் கைகளில் வைத்தும், தோளில் ஏந்தியும், பின்னாளில் தலையில் வைத்து கொண்டாடவும் செய்தனர். அஜித் ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்றழைக்கப்படுகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, சிட்டிசன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூவெல்லாம் உன் வாசம்,தீனா, முகவரி,வில்லன், அட்டகாசம்,பில்லா,  மங்காத்தா, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க காரணமாக அமைந்தது. 

நடிப்பு தவிர்த்து பைக் பயணத்தில் ஆர்வம் கொண்ட அஜித், ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகும் எதாவது ஒரு நாட்டுக்கு பைக் பயணம் மேற்கொள்ள சென்று விடுவார். சாதாரண மனிதரின் வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என ஆசைப்படுவதாக முன்னதாக அளித்த நேர்காணல்களில் தெரிவித்திருப்பார். இப்படியான நிலையில் அஜித் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி 31வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு சிறப்பித்துள்ளனர். இதில் மங்காத்தா, பில்லா, துணிவு உள்ளிட்ட படங்களின் கேரக்டர்கள் இடம் பெற்றுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?
பவன் கல்யாண் முதல் மாதம்பட்டி ரங்கராஜ் வரை..மனைவிகளிடையே ஒற்றுமை என்ன தெரியுமா?
கணவன் மனைவியான அனிருத் காவ்யா மாறன்..கிரீஸில் கோலாகலமாக நடந்த திருமணம்
கணவன் மனைவியான அனிருத் காவ்யா மாறன்..கிரீஸில் கோலாகலமாக நடந்த திருமணம்
தொடரும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்..! தியேட்டர் ஓனர்ஸ் ஹாப்பி அண்ணாச்சி! தித்திக்கும் தீபாவளி இதுதான் போல
தொடரும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்..! தியேட்டர் ஓனர்ஸ் ஹாப்பி அண்ணாச்சி! தித்திக்கும் தீபாவளி இதுதான் போல
காதலரை ரகசியமாக கரம்பிடித்த பிரியா பவானி சங்கர் ? இணையத்தில் பரவும் புகைப்படங்கள்
காதலரை ரகசியமாக கரம்பிடித்த பிரியா பவானி சங்கர் ? இணையத்தில் பரவும் புகைப்படங்கள்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.18 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Embed widget