மேலும் அறிய

30 years of annamalai: ” ரஜினிகாந்த் டைட்டில் கார்ட்டை விரும்பவில்லை “ - ’ அண்ணாமலை ‘பலரும் அறியாத சுவாரஸ்ய தொகுப்பு!

அண்ணாமலை திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் கரகாட்டக்காட்ரன் திரைப்பட புகழ் சண்முக சுந்தரம். 

சுரேஷ்
கிருஷ்ணா இயக்கத்தில் , ரஜினிகாந்த் , குஷ்பு நடிப்பில் 1992  ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை . இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. ஏழை , பணக்கார நண்பர்களிடையே ஏற்படும் விரிசலும் , அதனால் பாதிக்கப்படும் ஏழை நண்பன் எப்படி  தான் விடுக்கும் சவாலில் ஜெயித்து காட்டுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் . அண்ணாமலை படத்தின் திரைக்கும் பின்னால் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இருக்கிறது. அதனை ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் :

அண்ணாமலை திரைப்பம் 1987 ஆம் ஆண்டும் இந்தியில் வெளியான Khudgarz என்னும் படத்தின் ரீமேக். Khudgarz திரைப்படம்  ஜேர்ஃபி ஆச்சரின் Kane and Abe என்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் . ஆனால் Khudgarz திரைப்படத்திலிருந்து அண்ணாமலை திரைப்படம் மாறுபட்டது, கதாநாயகனின் கேரக்டரில்தான், ஏனென்றால் அந்த படத்தில் ஹீரோ பணக்காரார். அண்ணாமலை திரைப்படத்தில் ஹீரோ ஒரு பால்காரர். 

30 years of annamalai:  ” ரஜினிகாந்த் டைட்டில் கார்ட்டை விரும்பவில்லை “  - ’ அண்ணாமலை ‘பலரும் அறியாத சுவாரஸ்ய தொகுப்பு!

மூன்று இயக்குநர்களை சந்தித்த ‘அண்ணாமலை’:

முதலில் இந்த  திரைப்படத்தை முதலில் விசு இயக்க ஒப்பந்தமானார் அவர் முரண்பாடுகளால் விலகவே  அடுத்ததாக  வசந்த் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகுதான் சுரேஷ் கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

30 years of annamalai:  ” ரஜினிகாந்த் டைட்டில் கார்ட்டை விரும்பவில்லை “  - ’ அண்ணாமலை ‘பலரும் அறியாத சுவாரஸ்ய தொகுப்பு!

”இளையராஜா வேண்டாம் “ - பாலச்சந்தர்.

அண்ணாமலை திரைப்படத்தை ரஜினியின் குருவான கே.பாலச்சந்தர் தனது மனைவியுடன் இணைந்து தயாரித்திருந்தார். எப்போதுமே இளையராஜாவை இசையமைப்பாளராக தேர்வு செய்யும் பாலச்சந்தர் , இந்த படம் எடுக்கப்பட்ட சமயத்தில் இருந்த மனக்கசப்பு காரணமாக தேவாவை ஒப்பந்தம் செய்தார். தேவா - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் அண்ணாமலை. 

30 years of annamalai:  ” ரஜினிகாந்த் டைட்டில் கார்ட்டை விரும்பவில்லை “  - ’ அண்ணாமலை ‘பலரும் அறியாத சுவாரஸ்ய தொகுப்பு!

முதல் ’சூப்பர் ஸ்டார்’ டைட்டில் கார்ட்:

இந்த படத்தில்தான் ரஜினிகாந்திற்கு முதல் முறையாக சூப்பர் ஸ்டார் என்னும் டைட்டில் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அதனை விரும்பவில்லை. அந்த காலக்கட்டத்தில் இந்த பட்டம் தனக்கு அதிகம் என எண்ணி வெட்கப்பட்டாராம் . ஆனால் பாலச்சந்தர்தான் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். டைட்டில் கார்டுக்கு பின்னணி இசை கொடுத்தவர் தேவா. அதனை பீட் செய்ய இன்னும் எந்தவொரு இசைக்கலைஞராலும் முடியவில்லை. 

பிரபுதேவாவின் பங்கு :

அதே போல தேவா இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘வந்தேன் டா பால்காரன் ” பாடலுக்கான ட்யூனை மராத்தி பாடலான “மீ டோல்கர் தர்யாச்சா ராஜாவை” என்னும் பாடலில் இன்ஸ்பெயர் ஆகி எடுத்திருந்தார். வந்தேன் டா பால்காரன் திரைப்படத்திற்கு நடன இயக்குநர் பிரபுதேவா .

30 years of annamalai:  ” ரஜினிகாந்த் டைட்டில் கார்ட்டை விரும்பவில்லை “  - ’ அண்ணாமலை ‘பலரும் அறியாத சுவாரஸ்ய தொகுப்பு!

வசனம் எழுதிய நடிகர் :

வெறும் 45 நாட்களில் எடுக்கப்பட்ட அண்ணாமலை திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் கரகாட்டக்காரன் திரைப்பட புகழ் சண்முக சுந்தரம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!

எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு

"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா

ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்

Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?

Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்

அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget