மேலும் அறிய

கண்ணிவெடியில் கால் வைத்த தவெக; என்டிஏ கூட்டணியில் அமமுக ஆதரவு பெற்றது ஏன்? யார் விரித்த வலை?

அமமுகவின் ஆதரவு இல்லாமலேயே தவெகவால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் இருந்த நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சியை தவெக நாடியது ஏன்?

தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையிலும் என்டிஏ கூட்டணியிடம் ஆதரவு கோராமல், தவெக திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கொள்கை ரீதியாக ஆதரவு கோரி வந்த நிலையில், தற்போது என்டிஏ கூட்டணிக் கட்சியான அமமுகவிடம் சென்றது ஏன் என்று எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தவெகவுக்கு கடும் குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

116 ஆக உயர்ந்த தவெக ஆதரவு எம்எல்ஏக்கள்

தவெக ஆட்சி அமைக்க ஆளுநரை 3 முறை சந்தித்த நிலையிலும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் விசிக தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளது. விசிக ஆதரவு அளித்தால் தவெக ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழலில், என்டிஏ கூட்டணியில் உள்ள அமமுகவிடம் தவெக ஆதரவு கேட்டுள்ளது. ’’பெரும்பான்மைக்கு பற்றாக்குறை இருந்தபோதிலும் தவெக, என்டிஏ கூட்டணிக் கட்சிகளிடம் செல்லவில்லை, பொறுமை காத்து கொள்கை ரீதியில் இணக்கமான கூட்டாளிகளின் ஆதரவுக்காகக் காத்திருக்கிறது’’ என்று விஜய்க்கு மைலேஜ் ஏறி இருந்தது.

அரசியல் ரீதியாகவும் ஆட்சியமைப்பதிலும் சிக்கல்

எனினும் தற்போது என்டிஏ கூட்டணிக்குச் சென்று அமமுக எம்எல்ஏ காமராஜிடம் ஆதரவு கோரியது தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. குதிரை பேரம் நடந்துள்ளதாக ஆளுநரிடமே நேரடியாகச் சென்று டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளது, அரசியல் ரீதியாகவும் ஆட்சியமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

விசிக ஒருவேளை ஆதரவு அளித்தாலுமேகூட, அதிலும் குதிரை பேரம் நடந்திருக்குமோ என்று ஆளுநர் சந்தேகப்பட்டு விசாரணை செய்ய கால அவகாசம் எடுத்துக்கொள்ளவும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் தவெகவே வழிவகை செய்து கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. பாஜக விரித்த வலையில் தவெக தானாகவே விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


கண்ணிவெடியில் கால் வைத்த தவெக; என்டிஏ கூட்டணியில் அமமுக ஆதரவு பெற்றது ஏன்? யார் விரித்த வலை?

பாஜக விரித்த வலையில் தவெக விழுந்தது ஏன்?

அமமுகவின் ஆதரவு இல்லாமலேயே தவெகவால் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் இருந்த நிலையில், என்டிஏ கூட்டணிக் கட்சியை தவெக நாடியது ஏன்? பாஜக விரித்த வலையில் தவெக விழுந்தது ஏன்? தெரிந்தே தவெக கண்ணி வெடியில் கால் வைத்தது ஏன்? என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த முன்னெடுப்புகள், தமிழ்நாட்டை குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி நகர்த்துமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. 

எனினும் இதுகுறித்து தவெக வட்டாரத்தில் கூறும்போது, ’’அமமுக எம்எல்ஏ காமராஜ் தானாகவே வந்து ஆதரவுக்கரம் நீட்டியதால், அதை ஏற்றுக் கொண்டோம், அது இப்படி மாறும் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளனர். 

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

" முதல்வராகி விட்டீர்கள் Body Language மாற்ற வேண்டும் " விஜயை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை! வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவது எப்படி?
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை! வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவது எப்படி?
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget