மேலும் அறிய

Theni Lok Sabha Constituency 2024: தேனி தொகுதியில் எந்த கட்சியில் யார் யாருக்கு சீட் ? - விபரம் இதோ

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓபிஎஸ் போட்டியிட்டு வென்றதும் அதுபோல் டிடிவி முதன்முறையாக தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றதால் தேனி தொகுதி வி.ஐ.பி அந்தஸ்து பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பாராளுமன்ற தொகுதிகள் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே வந்து விடுகிறது. பல தொகுதிகள் தான் இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கி வருகிறது. அதுபோலதான் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளும், மதுரை மாவட்டத்தில் உள்ள, சோழவந்தான், உசிலம்பட்டி என இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் சேர்த்து ஆறு சட்டமன்ற தொகுதிகள் கொண்டது தான் தேனி பாராளுமன்ற தொகுதியாகும். இதில் ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதுபோல் போடி தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வென்றும் இருக்கிறார்கள். அதுபோல் டிடிவி தினகரன் முதன் முறையாக தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றார். அந்த அளவுக்கு இத்தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தும் பெற்றுள்ளது. 

Theni Lok Sabha Constituency 2024: தேனி தொகுதியில் எந்த கட்சியில் யார் யாருக்கு சீட் ? - விபரம் இதோ

இந்த தேனி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை பெரும்பாலும் அ.தி.மு.க. தான் அதிகம் வெற்றி பெற்று இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதியை தி.மு.க. கூட்டணியான காங்கிரசுக்கு ஒதுக்கியதின் பேரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியும் கூட ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரனாத்திடம் தோல்வியை தழுவினார். அப்படியிருந்தும் கூட இந்த முறை தேனி தொகுதியில் போட்டியிட காங்கிரசும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தொகுதியில் கூட்டணிக்கு வேண்டாம் திமுகவே களமிரங்களாம் என்று திமுகவும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.

Theni Lok Sabha Constituency 2024: தேனி தொகுதியில் எந்த கட்சியில் யார் யாருக்கு சீட் ? - விபரம் இதோ

இது சம்மந்தமாக தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும், மக்களிடம்  விசாரித்ததில், அதிமுக உள்கட்சியாக இருந்த போதிலும், எதிர் கட்சியாக நேர் எதிர் துருவமாக தற்போதும், ஓ.பி.எஸ்-சை எதிர்த்து அரசியல் செய்து கொண்டு வரும் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கத்தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளரும் மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளருமான ஜெயக்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கம்பம் செல்வேந்திரன் அதுபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரா ஆரூணின் இரண்டாவது மகனான இம்ரான் உள்பட சில கட்சிப் பொறுப்பாளர்களும், திமுகவில் சீட் கேட்டு வருகின்றனர். இதில், தங்கதமிழ்செல்வனுக்குதான் என்று சீட் என்று மேலிடம் உறுதிப்படுத்தியதாக அவர் கூறி வருகிறார்.  கூட்டணி கட்சியான காங்கிரஸ்சில் 2 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற எங்களுக்கு சீட் கொடுங்கள் என்று முன்னாள் எம்.பி ஆருணும், விருதுநகர் எம்.பி மதிமுகவுக்கு ஒதுக்கிவிட்டால், தேனியில் தனக்கும் என்று மானிக்தாகூரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Theni Lok Sabha Constituency 2024: தேனி தொகுதியில் எந்த கட்சியில் யார் யாருக்கு சீட் ? - விபரம் இதோ

அதிமுகவில், சீட் கேட்கவே தயக்கத்தில் இருக்கிறார்கள், அந்த வகையில், உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரன் பேர் பலமாக அடிபட்டு வருகிறது. அதேபோல், முன்னாள் எம்.பி., பார்த்திபன், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.கே. ஜக்கையனோ, தனக்கோ, தனது மகன் ஒருவருக்கு சீட்டும், கட்சி கவனிப்பும் இருந்தால் போட்டியிட தயார் என்கின்றனர். ஓபிஎஸ்-டிடிவி தினகரன் தரப்பில், எம்.பி ரவீந்திரநாத் அல்லது, டி.டிவி தினகரன் ஆகியோரில் ஒருவர் போட்டியிடலாம். யார் என்று பேச்சுவார்த்தை அவருகளுக்குள் அதிதீவிரமாக டிஸ்கஸ் ஓடிவருகிறது. பாஜாக கட்சியில், அண்ணாமலை தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம் பகுதியில் பயணம் மேற்கொண்டு கூட்டம் கூடியிருந்தாலும், அது ஓட்டாக மாறுமா என்ற கேள்வியே உள்ளது. அதேபோல், பாஜக வேட்பாளர் சீட் வேண்டும் என்று யாரும் முன்வந்ததாக அந்த கட்சி நிர்வாகிகள் யாரும் தெரியவில்லை. மாவட்டத்தில் நடைபெறும் உள்கட்சி பிரச்சனைகளாலும், சாதிய சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget