மேலும் அறிய

vikravandi by election : விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்... களத்தில் அமைச்சர் உதயநிதி..

விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது

விழுப்புரம்:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் 8ம் தேதி மாலையுடன் முடிவடைவதால் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாட்கள் திமுக இளைஞரணி அமைப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம்தேதி உடல்நலக்குறைவால் காலாமானார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.   

இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருவாமாத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் திருவாமாத்தூர் கிராமத்தில் பேசுகையில்...

நீங்கள் ஏற்கெனவே திமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கடந்த மக்களவைத்தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுத்தீர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில்போட்டியிட்ட புகழேந்தியை வெற்றிபெற வைத்தீர்கள். ஆட்சிக்கு வந்த திமுக பெட்ரோல், பால் விலையை குறைத்தது. விடியல் பயணம் திட்டத்தில் 8 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டது.

பெண்களுக்கான விடியல் பணயத்திட்டத்தில் 500 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப் பின் செயல்படுத்தப்படும்.

விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும். நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும். அன்னியூர் சிவாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!
PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவி.. சபாநாயகர் கொடுத்த புத்தகம்.! என்ன தெரியுமா.?
சட்டசபைக்கு வந்த ஆளுநர் ரவி.. சபாநாயகர் கொடுத்த புத்தகம்.! என்ன தெரியுமா.?
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Embed widget