மேலும் அறிய

Vikravandi By Election: 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தால் இந்த ஆட்சி கலைக்கப்படும் - அன்புமணி

தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிக்கோள் தமிழ்நாட்டின் முன்னேற்றம்தான், அமைச்சர்கள் வீதிக்கு வருவது இடைத்தேர்தலில் மட்டும் தான் - அண்ணாமலை

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பேராபத்து வந்துள்ளது என விக்கிரவாண்டி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் சி.அன்புமணி அவர்களை ஆதரித்து அக்கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், அமமுக தலைவர் டி.டி.வி தினகரன், பாஜக மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, தமாக தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியன், ஐ.ஜே.கே மாநில செயலாளர் ரவிபச்சமுத்து, ஜி.கே.மணி, உள்ளிட்டோர் பங்கேற்று வாக்கு சேகரித்து பேசினர்.

கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசுகையில்...

தேர்தலில் அம்மா, எம்.ஜி.ஆர் படம் போட்டதற்கு  சிலர்  எதிர்கின்றனர். ஆனால் 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அப்படிப்பட்ட கட்சி வேட்பாளருக்கு அம்மா படம் போடுவது பொறுத்தமானது. அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட நானும், ஓ.பி.எஸ் ம் இந்த கூட்டணியில் உள்ளோம், ஆனால் தற்போது தவறனா கையில் அதிமுக மாட்டிக்கொண்டுள்ளது. அதனை மீட்க நானும் , ஓ.பி.எஸ்ம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்று பேசினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பேசுகையில்..

நம்மிடம் இலை இல்லாவிட்டலும்,  இரட்டை இலையுடன் கூடிய மாங்கனி உள்ளது. பரிட்சயமான பெயரான அன்புமணிக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், அன்புமணி என்ற பெயர் ராசியான தேர்தல் அவர் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில்..

கோட்பா சட்டத்தை சிறுவயதில் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டு வந்தது தமிழகத்திற்கு பெருமை, இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற கொள்கையோடு 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாமக போட்டியிடுகிறது, இதற்கு காரணம் மாற்றம் கொண்டு வரவேண்டும், அரசியல் வரலாறு படைப்பதற்காக, தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய தேர்தல், அம்மாவின் நம்பிக்கையாக இங்கு ஓ.பி.எஸ்ம், டி.டி.வி தினகரன் உள்ளனர்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவின், 33 சதவீத வாக்கை 27 சதவீத வாக்காக இந்த கூட்டணி குறைக்க வைத்துள்ளது இந்த கூட்டணியின் முதல் வெற்றி. 2026 ஆம் ஆண்டு தேர்தலை மாற்றத்தை கொண்டு வருவேன், டாஸ்மாக் வேண்டாம் என்றால் பாமகவை ஆதரிக்கை வேண்டும். புரட்சி தலைவி அம்மாவின் தொண்டர்கள் பாமகவிற்கு தான் வாக்களிப்பார்கள், எது வந்தாலும், எது கொடுத்தாலும் நமக்கானது என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியதை போன்று நம்முடையது என்று நினைத்துக்கொண்டு மாம்பழத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றவர்,

2026 ம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார், மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குறிக்கோள் தமிழ்நாட்டின் முன்னேற்றம்தான், அமைச்சர்கள் வீதிக்கு வருவது இடைத்தேர்தலில் மட்டும் தான், திமுக என்ற தீய சக்திக்கு வாக்களிக்க வேண்டாம், மாற்றத்திற்காக, நேர்மைக்காக, தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அண்ணாமலை தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு...

இந்த இடைத்தேர்தலால் யாரும் ஆட்சியை இழக்க போவதுமில்லை, ஆனால் 2026 தேர்தலுக்கான முன்னோட்டம் தான், திமுக அதிகார பலத்தில் நிற்கின்றனர். பாமக கூட்டணி பலத்தில் நிற்கிறது என்றார், கள்ளக்குறிச்சி சாராய இறப்பு போன்று நாளை விக்கிரவாண்டியிலும் நடக்கலாம் என்றார், தமிழ்நாட்டிற்கு 69 விழுக்காடிற்கு ஆபத்து வரவுள்ளது, தமிழ்நாட்டிற்கு சமூகநீதியை கொண்டுவந்தவர் ஜெயலலிதா. அப்போது 69 விழுக்காடு ஒதுக்கீடிற்கு 9 வது அட்டவணையை கொண்டுவந்தார், ஜூலை 8க்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் 69 விழுக்காட்டிற்கு ஆபத்து உள்ளது.

இந்த விவகாரத்தில் நிச்சயமாக மத்திய அரசை வலியுறுத்துவோம், தப்பி தவறி 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தால் இந்த ஆட்சி கலைக்கப்படும் என்று ஆவேசமாக பேசினார். இடைத்தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார், எல்லா சமுயாயமும், திமுக உட்பட அனைத்து கட்சியினரும் பாமகவிற்கு வாக்களிக்க தயராகிவிட்டதாகவும், பாமக வேட்பாளர் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார், மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் என்பது தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவை குறைக்க வேண்டும், ஆனால் தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் மதுவை திணித்து வருகிறார் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
USA Terror Attack: புத்தாண்டு நாளில் தீவிரவாதிகள் தாக்குதல், அமெரிக்காவில் 15 பேர் உயிரிழப்பு - தலைவர்கள் ஆவேசம்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Embed widget