மேலும் அறிய

Vikravandi by election: தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு பழம் 20 ரூபாய் நோட்டு... வேட்புமனுத்தாக்கலில் நடந்த வினோதம்

ஆர்கே நகரில் 20 ரூபாய் நோட்டுகள் எப்படி பயன்படுத்தபட்டது போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்த கூடாது - காந்தியவாதி ரமேஷ்

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காந்தியவாதி ரமேஷ் அசோக சக்கர சின்னத்தை தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு பழம் 20 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனு தாக்கல் 24 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்கள் 26 ஆம் தேதி திரும்ப பெறுவதற்கான நாளாக அறிவிக்கபபட்டு இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இறுதி நாளான நேற்று இதுவரை 35 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம்  நாமகல்லலை சார்ந்த காந்தியவாதி ரமேஷ் 13 வது முறையாக மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த காந்தியவாதி ரமேஷ் தேர்தலில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் நேர்மையாக தேர்தல் நடைபெற வலியுறுத்தி அசோக சக்கர சின்னத்தை தாம்பூல தட்டில்  வெற்றிலை பாக்கு பழம் 20 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டுடன் எடுத்து வந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். ஆர்கே நகரில் 20 ரூபாய் நோட்டுகள் எப்படி பயன்படுத்தபட்டது போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பயன்படுத்த கூடாது என்பதை தெரிவிக்கும் வகையில் 20 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் தொகையாக பயன்படுத்த கொண்டு வந்ததாகவும் காந்தி வேடமிட்டு வேட்பு மனு தாக்கலை செய்ததாக கூறினார்.

வேட்புமனு தாக்கல் நிறைவு 

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த பத்தாம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி தொடங்கி நேற்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலை 3 மணி வரை திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட  64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 242வது முறையாகவும், அக்னி ஆழ்வார் 51வது முறையாகவும். நூர் முகமது 44 வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியும் இறுதி நாளான  நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வருகின்ற 24ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான இறுதி நாளாகும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த மாதம் பத்தாம் தேதி தேர்தலும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan | TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
வெடிக்குறோம் கலக்குறோம்... குல்பி ஐஸ், டால்பின், டோரிமோன்... தீபாவளிக்கு விதவிதமான பட்டாசுகள் அறிமுகம்
வெடிக்குறோம் கலக்குறோம்... குல்பி ஐஸ், டால்பின், டோரிமோன்... தீபாவளிக்கு விதவிதமான பட்டாசுகள் அறிமுகம்
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
போரில் திருப்பம்.. ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!
Watch Video: உவ்வே... சீனாவில் வானில் இருந்து பொழிந்த மல மழை; என்ன காரணம்? வீடியோ!
Watch Video: உவ்வே... சீனாவில் வானில் இருந்து பொழிந்த மல மழை; என்ன காரணம்? வீடியோ!
Embed widget