மேலும் அறிய
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
Breaking News LIVE: உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரையிலான, பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் அப்டேட்களை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
Background
- காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள-விழாக் கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
- குமாரபாளையம் அருகே பிடிபட்ட ஏ.டி.எம்., கொள்ளையர்களிடமிருந்து 67 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் - கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை
- காஞ்சிபுரம், திருப்பத்தூர், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை - இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்
- தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி மறைவு - பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
- தமிழகத்தில் காலாண்டு விடுமுறை இன்று தொடங்குகிறது - 9 நாட்கள் விடுமுறையுடன் அக்.7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் மீது புகார் - வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
- 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த திட்டம் - மத்திய அமைச்சர் தகவல்
- காவல்துறையின் கட்டுப்பாடுகளால் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் திருப்பதி பயணம் ரத்து - தன்னை தடுக்கும் ஆந்திர அரசு, நாளை பட்டியல் இனத்தவர் செல்வதை தடுக்குமா என கேள்வி
- புனே மெட்ரோ ரயில் சேவை - நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
- இஸ்ரேல் தொடர் குண்டு மழை - சிரியாவை நோக்கி படையெடுக்கும் லெபனான் மக்கள்
- அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தகவல்
- திருச்சபைகளில் பாலியல் சம்பவங்கள் மூடிமறைப்பு: போப் முன்னிலையில் பெல்ஜியம் பிரதமர் விமர்சனம்
- முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான ஷீகெரு இஷிபா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- இந்தியா-வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி - 2வது நாளான இன்றும் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு
- ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய ஆலோசகராக த்வெயின் பிராவோ நியமனம்
21:50 PM (IST) • 28 Sep 2024
மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும் கயல்விழி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகசிம் நியமனம்
மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக நியமனம்
21:50 PM (IST) • 28 Sep 2024
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு.
மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், K ராமசந்திரன் விடுப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும், கயல்விழி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் நியமனம்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















