மேலும் அறிய

Vikravandi by Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன தெரியுமா ?

எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதம மந்திரி, முதலமைச்சர், அமைச்சர்களின் படங்கள் வைத்திருக்கக்கூடாது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சியர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையம் விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் 10.07.2024 அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 10.06.2024 முதல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள், பிரதம மந்திரி, முதலமைச்சர், அமைச்சர்களின் படங்கள் வைத்திருக்கக்கூடாது உடனடியாக அவற்றினை அகற்றிட வேண்டும்.

அரசியல் கட்சியினை சார்ந்த இறந்துபோன தலைவர்களின் சிலையினை மறைத்திட வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் சிலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் சின்னங்கள், கல்வெட்டுகள் கட்டாயம் அகற்றிட வேண்டும். மேலும், வரலாற்று சிறப்பு மிக்க இறந்துபோன தேசிய தலைவர்கள், கவிஞர்கள், இந்திய ஜனாதிபதி மற்றும் ஆளுநர் புகைப்படம் அலுவலகங்களில் வைத்துக்கொள்ள தடையேதுமில்லை. தேர்தல் தொடர்பான அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் தேசிய கொடிகள் பயன்படுத்தாமல் இருப்பதை கண்காணித்திட வேண்டும். துறை சார்ந்த நலத்திட்ட விழாக்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் கால்நடைகள் மருத்துவ சிகிச்சைகளின் போது விளம்பர பதாகைகள் வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசுக்கு சொந்தமான இடங்களில் சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள், காகிதங்கள் அல்லது ஏனைய யாதொரு வகையிலான சேத நடவடிக்கைகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்றவை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும். இரயில் நிலையம். பேருந்து நிலையங்கள், இரயில்வே பாலங்கள், சாலைகள், அரசு பேருந்துகள், தொலைபேசி கம்பங்கள், நகராட்சி, உள்ளூர் அமைப்புகளில் கட்டடங்கள் போன்ற பொது இடங்களில் சுவர் எழுத்து, சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்ற வகையிலான அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் ஆகியவை 48 மணி நேரத்திற்குள் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள், நீதிமன்றத்தின் ஆணைக்குட்பட்டும் ஏதேனும் அரசியல் விளம்பரம் வைக்கப்பட்டிருப்பின் அவற்றினை 72 மணி நேரத்திற்குள் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அலுவலக வலைதளத்தில் அரசியல் சாதனை விளக்கும் யாதொரு விளம்பரம், அரசு/ மின்னணு ஊடகத்திலிருந்து நீக்கிடவும், அரசியல் சார்ந்த பொறுப்பாளர்களின் புகைப்படம், அமைச்சர்கள், அரசியல் கட்சிகள் பற்றி மத்திய/ மாநில அரசு அலுவலக வலைவளத்திலுள்ள அனைத்து குறிப்புகளும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் திட்டங்களுக்காக புதிய நிதி ஒப்பளிப்பு மேற்கொள்ளப்படக்கூடாது. முழுமையாக நிறைவடைந்த பணிகளுக்கு சம்மந்தப்பட்ட அலுவலர்களின் முழு திருப்தியுடன் நிதி அளிப்பதற்கு எவ்வித தடையுமில்லை, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னர், ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை அரசு, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் தொடரலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget