மேலும் அறிய

TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?

TVK Vijay Election Campaign: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். பின்னர், அவர் பரப்புரை மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சட்டமன்ற தேர்தல் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்குமுனைப் போட்டிகள் உருவாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம்.

விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்:

தவெக-வின் தலைவர் விஜய் இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்குவங்கியை பெறுவார் என்று ஒவ்வொரு கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். இந்த தேர்தலில் அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் அவர் ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.

இதற்காக, நாளை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி செல்கிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்கான தேர்தல் அதிகாரியின் அலுவலகம் அமைந்துள்ள பாலக்கரை பிரதான சாலையில் உள் மாநகராட்சி 2வது மண்டல குழு அலுவலக வளாகத்தில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.  அதேபோல, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் விமான நிலையம் அருகில் உள்ள கொட்டப்பட்டு பகுதியில் உள்ளது.

தேர்தல் பரப்புரை:

இந்த இரண்டு ஒரு இடத்தில் விஜய் நேரில் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். திருச்சிக்கு விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதை முன்னிட்டு, காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்யும் விஜய் திருச்சி டிவிஎஸ் டோல்கேட், மரக்கடை எம்ஜிஆர் சிலை, கே.கே.நகர், ஏர்போர்ட் வயர்லஸ் சாலை ஆகிய 4 இடங்களில் தேர்தல் பரப்புரை செய்ய ஏற்கனவே அனுமதி கோரியிருந்தார்.

காவல்துறையினர் விஜய்க்கு காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் தேர்தல் பரப்புரை வழங்க அனுமதி வழங்கியுள்ளனர். திருச்சிக்கு தனி விமானம் மூலமாக வரும் விஜய் 11 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். வேட்புமனுத் தாக்கலுக்கு பிறகு அவர் மரக்கடை பகுதியில் சென்று பரப்புரையை மேற்கொள்கிறார்.

திமுக கோட்டை:

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் கரூருக்கு மிக அருகில் உள்ள திருச்சிக்கு செல்கிறார். மேலும், அங்கு பரப்புரையும் அவர் மேற்கொள்ள இருப்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி திமுக-வின் கோட்டையாக திகழ்கிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் கோட்டையாக திகழும் திருச்சி திமுக-வின் வசமே இருக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுற்கு எதிராக விஜய் களமிறங்குவதால் கடும் சவால் இருவருக்கும் இடையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பூரில் விஜய் பரப்புரையின்போது போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று தவெக-வினரால் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சூழலில், நாளை விஜய்யின் திருச்சி பரப்புரையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினரால் செய்து தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருப்பதால் பெரும் பரபரப்பாக தமி்நாடு நாளுக்கு நாள் மாறி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget