மேலும் அறிய

TVK Vijay Campaign: "விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லுங்க.." குட்டி ரசிகர்களுக்கு தவெக தலைவர் வேண்டுகோள்!

TVK Vijay Campaign Today: ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள தனது குட்டி ரசிகர்கள் அவர்கள் வீட்டில் உள்ளவர்களை விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுக்குமாறு விஜய் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தமிழ்நாட்டிற்கான தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. 

ரசிகர்கள் பட்டாளம்:

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகரான விஜய் இந்த தேர்தலில் முதன்முறையாக போட்டியிடுகிறார். 

அவரது தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடுகிறது. 30 ஆண்டுகாலமாக கதாநாயகனாக நடித்துள்ள விஜய்க்கு குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் ரசிகர்கள் பட்டாளம் மிக அதிகளவு உள்ளது.

இந்த தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய அளவு குழந்தைகள், வளரும் சிறுவர்கள், இளைஞர்கள் ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை நந்தனத்தில் விஜய் தனது பரப்புரையை முடித்தார். 

விஜய் மாமாவுக்கு ஓட்டுப்போடுங்கள்:

இன்று நந்தனத்தில் பேசிய விஜய் தனக்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குழந்தைகள், சிறுவர்களின் ஆதரவையும், அவர்களை அவர்களது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆதரவு பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்தார். விஜய் இதுகுறித்து பேசியதாவது, இந்த நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற எனது நண்பா, நண்பீஸ்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்க ஏதாவது ஒரு சாக்லேட்டோ, கிண்டர் ஜாய் வேண்டுமென்றால் அழுது அடம்பிடிச்சு  சாதிச்சுட்றீங்க. அது மாதிரி ஏதாவது ட்ரெஸ் வேண்டுமென்றால் அழுது அடம்பிடிச்சு சாதிச்சுட்றீங்க.

அதுமாதிரி உங்களுக்கு பிடிச்ச இந்த விஜய் மாமாவுக்காக இந்த விஜய் மாமா ஜெயிக்கனுங்குறதுக்காக நம்ம தமிழ்நாடு ஜெயிக்கனுங்குறதுக்காக உங்க வீட்டில் இருக்கிற உங்க அம்மா, உங்க அப்பா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என உங்கள் வீட்டில் ஓட்டு போடும் வயதில் இருக்கும் அண்ணா, அக்கா அனைவரிடமும் விசில் சின்னத்தில் போடச் சொல்லுங்கள்.

காதிலே விசில் ஊதுங்கள்:

ஒரு வேளை யாராவது ஓட்டுப்போடாமல் வீட்டிலே உட்கார்ந்து இருந்தால் அவர்கள் காதிலே விசில் ஊதி ஓட்டுப்போட ஓட வையுங்கள். இப்படித்தான் இருக்கப்போகிறது இந்த தேர்தல்.
இவ்வாறு அவர் கூறினார். விஜய்க்கு ஓட்டுப்போடுமாறு வலியுறுத்தி பல வீடுகளிலும் குழந்தைகள், சிறுவர்கள் பேசும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget