மேலும் அறிய

பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டுக்கொடுத்தது ஏன்? மனம் திறந்த தவெக மாவட்டச் செயலாளர் சிவா!

பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டுக்கொடுத்தது ஏன்? என்று தவெக மாவட்டச் செயலாளர் சிவா மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அரசியல் கட்சி தவெக. இந்த கட்சியின் தலைவரான நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதியில் போட்டியிடுகிறார்.

பெரம்பூர் தொகுதியில் தவெக-வின் கட்சி உறுப்பினர் சேர்க்கையை மிகப்பெரிய அளவில் அதிகபப்படுத்தியவர் அக்கட்சியின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா. இவருக்குப் பதிலாகவே விஜய் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த சூழலில், இதுதொடர்பாக மாவட்டச் செயலாளர் சிவா தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

விஜய் போட்டியிடுவது பெருமை:

"இது அவருடைய கட்சி. என் தலைவர். நான் போட்டியிட்டு இருந்தாலும் அவர் என்னை வேட்பாளராக அறிவித்திருப்பார். இப்போது 234 தொகுதி பார்வையும் பெரம்பூர் பக்கமும் இருக்கிறது. அது பெரம்பூர் மக்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி. வட சென்னையை ஒரு பிரிவில் வைத்துள்ளனர். அதை இன்று வேறு ஒரு பிரம்மாண்டமாக விஜய் மாற்றியுள்ளார்.

விஜய் இங்கு போட்டியிடுவதை நான் பெருமையாகவே பார்க்கிறேன். நான் போட்டியிட்டு இருந்தாலும் ஒரு வேட்பாளராகத்தான் தெரிந்திருக்கும். ஆனால், இப்போது அப்படி இல்லை. நான் பொறுப்பேற்ற முதல் நாளே என் தொகுதியில் என் தலைவரை நிற்க வைக்க போராட வேண்டும் என்றுதான் நாங்கள் வேலை செய்தோம்.

அதிக வாக்குகளில் வெற்றி பெறுவார்:

மாற்றுத்தொகுதியில் போட்டியிடுகிறீர்களா எனக் கேட்டார்கள். எனக்கு அது விருப்பம் கிடையாது என்றேன். நான் என் தலைவருக்கு வேலை செய்கிறேன். ஒரு தொண்டனாகவே கடைசி வரை பயணிக்கலாமே என்பதால் நான் நல்லவிதமாகவே எடுத்துகொண்டேன். அவரே இங்கு போட்டியிடும்போது அவருக்காக வேலை பார்ப்பதுதான் பெரிய சந்தோஷம்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். சென்னை முடிக்கும்போது இங்கு வந்து முடிப்பார். அவர் வர வேண்டும் என்று இந்த தொகுதி மக்கள் எல்லாரும் விருப்பமாகவே சொல்கிறார்கள். அவர் எந்த தொகுதியில் நின்றாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 

சென்னை திமுக கோட்டையா?

எங்களுக்கு தினமும் அவரைப் பார்க்கும்போது புதியதாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தாய்மார்களே நாங்களே ஓட்டு கேட்கிறோம் என்று கூறுகிறார்கள். எம்ஜிஆருக்கு பிறகு இவரை நேசிக்கிறார்கள் என்றால் இதை வைத்துதான் விஜய் சொல்லியிருக்கிறார்.

பெரம்பூரில் எம்எல்ஏ, எம்பி யாரும் இந்த பக்கமே வந்ததே இல்லை. நானும் இந்த பகுதியில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறேன். விஜய் வந்த பிறகுதான் மக்களைப் போய் அவர்கள் பார்க்கிறார்கள். திமுக-வின் கோட்டையாக சென்னையாக நினைக்கிறார்கள். எஸ்ஐஆருக்கு முன்பு வேறு எஸ்ஐஆருக்கு பின்பு வேறு. 

ஆதங்கம்:

திமுக கோட்டையாக இனி எந்தவொரு தொகுதியையும் கணக்கிட முடியாது. மக்கள் விரும்பும் முதல்வராக ஒவ்வொரு வீட்டிலும் அவர் இருக்கிறார். திமுககாரர்களாக இருந்தாலும் அவர்கள் எங்கள் நோட்டீசை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். நல்லது செய்யவில்லை என்ற ஆதங்கம் அவர்கள் மனதிலும் பதிகிறது.

பூத் ஏஜெண்ட்கள் அதிகளவிலே உள்ளனர். நாங்கள் அதற்கு இன்று அடிக்கல் நாட்டவில்லை. முதல் நாள் முதலே நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எனக்கு எவ்ளோ கொடுத்தாலும் வேண்டாம். அவர் கூட இருந்தாலே எனக்கு போதும். எனக்கு மற்ற கட்சியினர் கொடுக்கும் கட்சியை வைத்து நாம் நிம்மதியாக இருக்கவே முடியாது.

நேர விரயம்:

எங்கள் மக்கள் இயக்கம் காலம் முதலே நாங்கள் பயணித்துள்ளோம். மக்களுக்கு அவர்கள் ஏதும் செய்யாததாலே அது வெறுப்பாக மாறிவிட்டது. மிரட்டல் வந்தாலும் அதற்கு நான் எந்த பதிலும் திருப்பித் தரமாட்டேன். அவர்களுடன் சண்டையிட்டால் எங்களுத்தான் நேர விரயம்.

தற்குறி என்பதை வாட்ஸ் அப் குரூப் போல பேசிவைத்து பேசுகிறார்கள். இதை 100 பேருக்கு மேல் இதையே பேசுகிறார்கள். அதை நாங்கள் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget