மேலும் அறிய

TVK Vijay: வீடுதோறும் விசில் கோலம்.. விஜய் சொன்னதை செய்த பெண்கள்.. ஓட்டு கிடைக்குமா?

தவெக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் சொன்னதை செய்வோம், ஊழல் செய்ய மாட்டோம், மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டோம். என்னை முழுவதுமாக நம்பலாம் என விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கோரிக்கையை ஏற்று பெண்கள் வீடுகளில் விசில் கோலம் போட்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். 

தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை

வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்நாடு அரசியல் களம் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என்ற மும்முனை போட்டியாக இருக்கும். ஆனால் நான்காவதாக 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் களம் கண்டுள்ளது. இதனால் இம்முறை பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழும் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பது அரசியல் களத்தில் அப்பட்டமாக தெரிவதாக பிற அரசியல் கட்சி தொண்டர்களே ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு கள நிலவரம் மாறியுள்ளது. 

யாருடைய வாக்குகளை விஜய் பிரிப்பார்?

விஜய் திமுக மற்றும் அதிமுகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் யாருடைய வாக்குகளை அவர் பிரிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயை பார்க்க கூட்டம் அதிகமாக வருவதால் பாதுகாப்பு கருதி அவர் தொடர் பரப்புரை மேற்கொள்ளாமல் உள்ளார். இருந்தாலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், திருச்சி, காரைக்குடியைத் தொடர்ந்து சென்னையில் விஜய் பரப்புரை மேற்கொண்டு தவெகவின் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்துள்ளார். 

தவெக தேர்தல் அறிக்கை 

இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட்டார். அதன் பிரதியானது விவசாயி, ஆட்டோ ஓட்டுநர், ஆசிரியர், ஓய்வுப்பெற்ற காவல்துறை அதிகாரி , தூய்மைப்பணியாளர், திருநங்கை என பலருக்கும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 10 முக்கிய வாக்குறுதிகளை தெரிவித்தார். 

தான் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் சொன்னதை செய்வோம், ஊழல் செய்ய மாட்டோம், மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டோம். என்னை முழுவதுமாக நம்பலாம் என தெரிவித்தார். கடைசியாக தனது உரையை முடிக்கும்போது இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ளது. எனவே பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் நமது விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும். இது எனக்கு கொடுக்கும் மிகப்பெரிய ஆதரவாக அமையும் என தெரிவித்தார். மேலும் நிச்சயமாக 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் நம்பிக்கையளித்தார். 

வீடுதோறும் விசில் கோலம்

இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பெண்கள் பலரும் வீடுகளில் விசில் கோலம் வரைந்து சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். Vote for TVK எனவும் அதில் எழுதியுள்ளனர். இந்த புகைப்படத்தை தவெகவினர் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேசமயம் ஒரு ஆர்வத்தில் யார் வேண்டுமானாலும் கோலம் போட்டு விடலாம். ஆனால் இவர்களெல்லாம் ஓட்டு போடுவார்களா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
Embed widget