மேலும் அறிய
Advertisement
கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பு
இதுவரை கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 447 இடங்களுக்கு 1994 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அது மட்டும் இன்றி 10 பேர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுக, விசிக, அமமுக, மக்கள் நீதி மையம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாளன நேற்றுவரை பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மேலும் இதுவரை கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 447 இடங்களுக்கு 1994 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அது மட்டும் இன்றி 10 பேர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டு உள்ளனர்.இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கவும், வாக்கு எண்ணிக்கைக்கும் 14 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன் படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையமாக கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியும், பண்ருட்டி நகராட்சிக்கு சுப்பராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், சிதம்பரம் நகராட்சிக்கு ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியும், விருத்தாசலம் நகராட்சிக்கு திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியும், வடலூர் நகராட்சிக்கு குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், திட்டக்குடி நகராட்சிக்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதேபோல, அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியும், காட்டுமன்னார் கோயில், லால்பேட்டை பேரூராட்சிகளுக்கு காட்டுமன்னார் கோவிலில் உள்ள பருவதராஜ குருகுல மேல்நிலைப்பள்ளியும், புவனகிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகளுக்கு புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், கங்கை கொண்டான், மங்கலம்பேட்டை பேரூராட்சிகளுக்கு மங்கலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியும், பெண்ணாடம் பேரூராட்சிக்கு திட்டக்குடி அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகளுக்கு சேத்தியாத்தோப்பு தேவங்குடி கோபால கிருஷ்ணன் மழவராயர் மேல்நிலைப்பள்ளியும், தொரப்பாடி, மேல்பட்டாம் பாக்கம் பேரூராட்சிகளுக்கு புதுப்பேட்டையிலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், கிள்ளை பேரூராட்சிக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும் வாக்கு எண்ணும் மையங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion