மேலும் அறிய

TN Richest Candidates: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார்? அதிமுக, திமுக, தவெக எல்லாத்துலயுமா?

Richest Candidates TN Election 2026: மொத்தத்தில் 1048 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மாநிலத்தின் டாப் பணக்கார வேட்பாளராக லீமா ரோஸ் உள்ளார். 

Tamil Nadu Richest Candidates: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் டாப் 10 பணக்கார வேட்பாளர்கள் யார் யார் ...? பார்க்கலாம்.

லீமா ரோஸ் மார்ட்டின் ( லால்குடி ) 

லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் 139 கோடி ரூபாய் மதிப்புடைய நகை உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. அசையா சொத்துகளைப் பொருத்தமட்டில் 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் உள்ளன. மொத்தத்தில் 1048 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மாநிலத்தின் டாப் பணக்கார வேட்பாளராக லீமா ரோஸ் உள்ளார். 

கணவர் மார்ட்டின் பெயரில், கணவர் பெயரில், 3262 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அதேபோல 887 கோடி ரூபாய் மதிப்புக்கு கட்டிடங்கள், நிலம் ஆகியவை உள்ளன.

இது தவிர மகன் ஜோஸ் டைசன் என்பவர் பெயரிலும் 662 கோடி மதிப்புக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன. தாக்கல் செய்துள்ள சொத்து கணக்கு விவரங்களின்படி தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின்தான் என்பது தெரியவந்துள்ளது. மகன் பெயரிலும் ரூ.665 கோடிக்கு சொத்து உள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் லீமா ரோஸ் மார்ட்டின்.

தவெக விஜய் (பெரம்பூர், திருச்சி கிழக்கு )

தவெக தலைவர் விஜயிடம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளோடு விஜய், இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்)

இவர் தனது பெயரில் ரூ.180.03 கோடி அசையும் சொத்துகளையும், மனைவியின் பெயரில் ரூ.162.14 கோடி சொத்துகளையும் கொண்டுள்ளார்.

கார்த்திக் மோகன் (வில்லிவாக்கம்)

வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் அவரது மனைவி பெயரில் 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான அசையும் சொத்துகள் இருப்பதாகவும் , 97 கோடிக்கு மேல அசையா சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கார்த்திக் மோகனிடம் 119 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக பிரமானப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சௌமியா அன்புமணி (தர்மபுரி)

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு, 68.46 கோடி ரூபாய் சொத்து உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இவர் 61.42 கோடி என்ற அளவில் சொத்து மதிப்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தற்போது இரண்டு ஆண்டுகளில், சொத்து மதிப்பு, 7.04 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது

பிரேமலதா விஜயகாந்த் (விருதாச்சலம்)

விருதாச்சலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அசையும் சொத்துக்களாக தன்வசம் ரூ.31.9 கோடியும் அசையா சொத்துக்களாக ரூ.63.3 கோடியும் கடன்களாக 57.8  கோடியும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்

விஜய பிரபாகரன் (விருதுநகர்)

இந்தத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு ரூ.28.70 கோடி (அசையும்: ₹19.70 கோடி, அசையா சொத்து  ₹9 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி)

துணை முதலமைச்சர் உதயநிதி, 20.64 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்பதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்)

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அசையும் சொத்து 3 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரம் இருப்பதாகவும், அசையா சொத்து ரூ.4 கோடியே 34 லட்சம் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ஒரு கோடியே 32 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அசையும் சொத்தும், 2 கோடியே 11 லட்சம் ரூபாய் அசையா சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) அசையும் சொத்துகளாகச் சுமார் ரூ.50.86 லட்சமும், 100 கிராம் தங்க நகைகளும் கொண்டுள்ளார். அவருக்குத் தனியாக அசையா சொத்துகளோ அல்லது விவசாய நிலமோ இல்லை. ஆனால், அவரது மனைவி ராதா பெயரில் 8 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் பண்ணை வீடு உட்பட ரூ.3.45 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துக்கள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget