மேலும் அறிய

TN Urban Local Body Election 2022 Results: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: இன்னும் சற்று நேரத்தில் தொடக்கம் !

TN Urban Local Body Election Results 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

 தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழ்நாட்டில் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருந்தது. சென்னையில்  மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டிருந்தனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:

மொத்த பதவியிடங்கள்: 1374

போட்டியின்றி தேர்வானவர்கள்: 4 

தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 1370

தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 11,196

நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:

மொத்த பதவியிடங்கள்: 3843

போட்டியின்றி தேர்வானவர்கள்: 18

தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 3825

தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 17,922

பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி: 

மொத்த பதவியிடங்கள்: 7609

போட்டியின்றி தேர்வானவர்கள்:196 

தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 7412

தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 28,660

மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளனர்.  அந்தப் பதவிகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. 

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியின் 8ஆவது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் பேரூராட்சியின் 12 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 36ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஈரோடு அம்மாப்பேட்டை பேரூராட்சியில் வேட்பாளர் ஐயப்பன் மறைவால் தேர்தல் அங்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தஞ்சை மாவட்டத்தின் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9ஆவது வார்டிலும் வேட்பாளர் மரணத்தால் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் -  கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Credit Card: கூவி கூவி விற்பனை..! ஓயாமல் தொல்லை செய்யும் வங்கிகள் - கிரெடிட் கார்ட்களின் டார்க் சீக்ரெட்ஸ்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
Watch Video: கேசுவல் வாக், கைகளில் விளையாடிய துப்பாக்கிகள் - ரூ.25 கோடி அபேஸ்.. வீடியோ வைரல்
Embed widget