Pudukkottai Annavasal Clash:புதுக்கோட்டை: அன்னவாசல் பேரூராட்சியில் கல்வீச்சு - தடியடி நடத்தி துரத்திய போலீசார்
புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மோதல் ஏற்பட்டதால் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் உறுப்பினர்கள் கடந்த 2ஆம் தேதி பதவியேற்று கொண்டனர். அதன்பின்னர் இன்று மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சியின் மேயர்,துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் அன்னவாசல் பேரூராட்சியில் தலைவர் தேர்தலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. திமுகவினர் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பேரூராட்சி அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக அப்பகுதியில் மோதலில் ஈடுபட்ட திமுகவினரை காவல்துறையினர் விரட்டியடித்தனர். அதிமுகவினர் இந்த பேரூராட்சியில் அதிக பெரும்பான்மையில் உள்ளதாக இங்கு பேரூராட்சித் தலைவர் தேர்தலை நடத்தவிடாமல் திமுகவினர் எதிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்பின்னர் நடைபெற்ற பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவின் சாலை பொன்னம்மாள் வெற்றி பெற்றுள்ளார்.





















