மேலும் அறிய

மோடியின் பிடியில் அதிமுக! – திருவள்ளூரில் ராகுல் காந்தி அதிரடி அட்டாக்

தமிழ்நாட்டில் அதிமுக இல்லை; பாஜகவின் முகமூடியாகத்தான் அதிமுக இருக்கிறது - ராகுல் காந்தி விமர்சனம்

ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவினர் நரேந்திர மோடியிடம் சரண் அடைந்துவிட்டதாக திருவள்ளூர் பிரச்சாரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி  பேசுகையில், “நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் தமிழ்நாட்டின் மண்ணோடு நெருங்கிய உறவு உண்டு. தமிழ்நாட்டுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்துவதே மத்திய பாஜக அரசின் திட்டமாகும். நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தார்கள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்துடனே தொகுதி மறுவரையறை மசோதா. அதனை முறியடித்திருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்கள் மொழி, கலாச்சாரத்தை காக்கும் உரிமை உள்ளது. பண்டைய காலத்தில் ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், ராணுவம் இல்லாமல் அதே தாக்குதலை பாஜக நடத்துகிறார்கள். 

தமிழ்நாட்டில் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது

தமிழர்கள் யார் என்பதை பாஜக புரிந்துக் கொள்ளவில்லை. தமிழ் மொழி தமிழர்களுக்கு எவ்வளவும் முக்கியம் என்பது பாஜகவுக்கு புரியவில்லை. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, மொழியை அழிக்க நினைக்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேற விடமாட்டோம். பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்ன செய்ய நினைக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் தமிழ் இனத்துக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இணைந்து தமிழ்நாட்டு மக்களை, தமிழ் மொழியை தாக்குகிறார்கள். பாஜக தமிழ் மீது தாக்குதல் நடத்தும்போது எல்லாம் நான் தமிழனாகவே உணர்கிறேன்.

பாஜக அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டது

மோடி மற்றும் அமித் ஷாவின் பேச்சை கேட்கும் ஆட்களை தமிழ்நாட்டில் முதலமைச்சராக்க முயற்சிக்கின்றனர். சமூகநீதி என்றால் என்னவென்று இந்தியாவுக்கு காட்டியது தமிழ்நாடு. மோடி மற்றும் அமித் ஷாவுக்கு தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து ஆள்வதற்கு கூட்டாளி வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழ்நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். பாஜக அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டது. தமிழ்நாட்டில் அதிமுக இல்லை; பாஜகவின் முகமூடியாகத்தான் அதிமுக இருக்கிறது. ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவினர் நரேந்திர மோடியிடம் சரண் அடைந்துவிட்டனர். பெரியாரின் சிந்தனைகளை, தத்துவங்களைத் தகர்க்க பாஜகவும் ஆர்எஸ்எஸும் சதி செய்கிறது. அவரின் சமூக நீதிக் கொள்கைகளை அழிக்கப் பார்க்கிறார்கள், முதலில் கொள்கைக்கான போர் பிறகுதான் அரசியல்” என்று பேசினார்.

பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி. ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆவடி திமுக வேட்பாளர் நாசர், பூவிருந்தவல்லி திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget