மேலும் அறிய

டெல்லிக்கு செக் வைத்த ஸ்டாலின்! "திருப்பத்தூரில் அந்த தகவல் வரப்போகுது" - வைரலாகும் ஸ்பீச்!

திருப்பத்தூர் 4 தொகுதி வெற்றி என தகவல் வரவேண்டும். தமிழ்நாடா ?  டெல்லியா? இந்த ஜனநாயக போரில் தமிழ்நாடு அணி தான் வெல்லும் - முதல்வர் ஸ்டாலின்

மாநில உரிமை என்பது, இடுப்பில் கட்டும் வேஷ்டி போல அது எங்கள் உயிர்கொள்கை என்றும் பாஜகவின் பாதம் தாங்கி பழனிசாமி தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்க பாடதபாடுபடுகிறார் என்றும் ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மண்டலவாடி பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ். எஸ்.பி.சையத் பாரூக் பாஷா போட்டியிடும் ஏணி சின்னத்திற்கும், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வில்வநாதன் உதயசூரியன் சின்னத்திற்கும், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவிதா தண்டபாணி உதயசூரியன் சின்னத்திற்கும், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில்  திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்லதம்பிக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டின் திட்டங்கள் என்றால் அலட்சியம்

அப்பொழுது பேசிய முதல்வர், “2 மாதம் முன்புதான் வடக்கு மண்டல பாக முகவர் கூட்டத்திற்கு வந்தேன், மலைகள் சூழ்ந்த பகுதியில் மாஸ்காட்டி எதிரிகளுக்கு பயம் காட்டினோம், தற்போது மீண்டும் 7 ஆவது முறை திமுக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு வந்துள்ளேன். வடதமிழ்நாட்டின் முக்கிய ரயில் சந்திப்பான ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளேன். சந்தன காடான திருப்பத்தூர், சேண்டல் சிட்டி திருப்பத்தூர் திராவிட மாடல் 2.0 அமைய,  முழு வெற்றிய தரவேண்டும். மற்ற மாவட்டங்களை விட வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு, வரும்போது ரயிலில் தான் வருகிறேன். சென்னை - பெங்களூர் சாலை மோசமாக உள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டின் அமைச்சர்களும் நேரில்  பேசினார்கள். தமிழ்நாட்டின் திட்டங்கள் என்றால் அது அலட்சியம்,  மத்திய அமைச்சர்கள்  அலட்சியம் காட்டுகிறார்கள், சீக்கிரம் முடிக்க மாட்டார்கள்.

பிரதமர் மோடி இப்படி பேச கூடாது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை 10 வருடமாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்,  அது என்ன தாஜ்மஹாலா அல்லது, தஞ்சை பெரியகோவிலா ஏன்  தாமதம் ஆகிறது. இந்த அளவு தான் தமிழ்நாட்டின், மீதும், திருப்பத்தூர் மீதும் அக்கறை உள்ளது. தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்யும் பிரதமர் திமுக மிக மோசமான நிர்வாகம் செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார், இவர்களுக்கு இதே வேலையாக போச்சு, தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்கள் எதையாவது பேசிய சொந்த காசில் சூனியம் வைத்து கொள்கிறார்கள். இதே மாதிரி பேசிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அரசின் தரவுகளை வைத்து, நான் பதிலடி கொடுத்தேன், தமிழ்நாட்டில் தரவுகளை வைத்து மோடி பேசட்டும், தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வு அறிக்கைகளை பார்த்து பேச வேண்டும். பிரதமர் மோடி உங்கள் அறிக்கையும் பார்க்காமல், ஐநா போன்ற உலக அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு தந்த விருதுகளையும் பார்க்காமல், தேர்தலுக்காக ஒரு மாநிலத்திற்கு எதிராக பேசக்கூடாது பாஜகவின் மோடி பேசினால் கண்டுக்கொள்ள மாட்டோம். ஆனால், நாட்டில் உயர் பொறுப்பில் இருக்ககூடிய அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்ககூடிய  பிரதமர் மோடி இப்படி பேச கூடாது, அது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.

 

ஒரு குடும்பத்திற்கு மட்டுமே ஏறத்தாழ 1 லட்சம் அளவிற்கு நலத்திட்ட உதவிகள் திராவிட மாடல் அளிக்கிறது. குறுக்கே எந்த இடைத்தரகரும் கிடையாது, ஊழல்,முறைகேடு  என எதிர்கட்சி பேச முடியாது, பாயின்ட் டூ பாயின்ட் பஸ் மாதிரி, எல்லாமே கிளீன், நீட்டா அரசிடம் இருந்து மக்களுக்கு செல்கிறது, இந்த தேர்தலை மக்கள் திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு,  நன்றி அறிவிப்பு விழாவாக பார்க்கிறார்கள், எந்த காலத்திலாவது இத்தனை திட்டம் மக்களை தேடி போகுமா, அதிமுகவின் தேர்தல் அறிக்கை நம்முடைய திட்டத்தை பெயர் மாற்றி வைத்துள்ளார்கள், பேட்டா, ஷூ வை டாட்டா ஷூ என பெயர் மாற்றி வைப்பார்கள், எதிரிகள் நம்மை பாஃலோ செய்யும் அளவிற்கு இருக்கிறார்கள், முக்கியமான ஆபத்து தொகுதி மறுவரை கூட்டம் கூட்டப்பட உள்ளது. அதற்கு எம்.பிக்கள் போக வேண்டுமா என கேட்கிறார்கள், அனைவரும் செல்லுங்கள் என உத்தரவிட்டுள்ளேன், நமக்கு அதுதான் முக்கியம்.

திமுகவின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும்

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு விடுக்க கூடிய எச்சரிக்கை என வீடியோ வெளியிட்டேன். வட மாநிலங்களும், தமிழகத்திற்கும் இடையே இடைவெளியை அதிகரிக்கும் சதிதிட்டம், இந்திய அரசியலை 50 ஆண்டுகளுக்கு புரட்டி போடும் சட்டத்தை, அவசரகதியில்,  இந்த சட்டமன்ற  தேர்தல் நேரத்தில் கொண்டு வருவது, இதைவிட ஜனநாயக விரோதம், பாசிசம் இதைவிட இருக்க முடியுமா? இதை கொண்டு வந்தால் தமிழ்நாட்டு எம்.பிக்கள் எதிர்ப்போம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும், மக்கள் மன்றத்தில் சும்மா விடமாட்டோம், அண்ணா, கலைஞர் மீது, ஆணை இதை விடமாட்டோம், திமுகவின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும், பதவி, ஆட்சி, அதிகாரம், தேர்தல் எல்லாம், தோளில் போடும் துண்டு மாதிரி, ஆனால் மாநில உரிமை என்பது இடுப்பில், கட்டும் வேஷ்டி போல அது எங்கள் உயிர்கொள்கை, பேராபத்து தமிழ்நாட்டை சூழ்ந்துள்ளது, இதை எதிர்க்க வக்கில்லாத பழனிசாமி, என்ன சொல்கிறார் பெண்களுக்கு எதிராக 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது, திமுகவிற்கு பிடிக்கவில்லை, அவர்களுக்கு தோல்வி பயம், என நூதன முறையில்,  அவர்களின் ஒனருக்காக முட்டுக்கொடுக்கிறார்.

உள்ளாட்சி அமைப்புகளில், அனைத்து நிலையிலும் 1996 ஆம் ஆண்டு  பெண்களுக்கு, 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர், தற்போது, நகர்புற உள்ளாட்சிகளில், பெண்களுக்கு 50 விழுக்காடு, இட ஒதுக்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் மேயர், அதிகம் என்ற நிலையை உருவாக்கியது, முத்துவேல் கருணாநிதி தலைமையில் நடைப்பெறும், திராவிட மாடல் அரசு பாஜகவின் பாதம் தாங்கிய பழனிசாமி, பீகார் முதல்வரை போல தமிழ்நாட்டை ஒப்படைக்க படாத பாடுகிறார், இது திமுக ஆளும் தமிழ்நாடு, தொடர்ந்து நாங்கள் ஆளப்போகும் தமிழ்நாடு,
நீங்கள் என்னதான் அடிமை சேவகம் செய்தாலும், தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகுவைக்க விடமாட்டோம்,  2026 தேர்தல் அறிவிக்கை, சாதாரண அறிக்கை இல்லை, சூப்பர் ஸ்டார் அறிக்கை எங்கள் தேர்தல் அறிக்கை.

உங்கள் வீட்டுகாரர் எதாவது கூறினால், அண்ணனிடம் கூறுங்கள், கொடுத்ததெல்லாம் கொடுத்தார் என எம்.ஜி.ஆர் பாடலை
ஸ்டாலின் அண்ணா ஒருதருக்கா கொடுத்தார், ஒட்டுமொத்த பெண்களுக்கு கொடுத்தார் என பாடல் பாடினார். தேர்தல் முடிவில் திருப்பத்தூர் 4 தொகுதி வெற்றி என தகவல் வரவேண்டும். தமிழ்நாடா ?  டெல்லியா? இந்த ஜனநாயக போரில் தமிழ்நாடு அணி தான் வெல்லும், ஏதோ, நான் முதல்வராகவும், 30 பேர் அமைச்சராகவும், கூட்டணியில், 200 பேர் எம்.எல்.ஏ.வாக இருப்பது வேறு, அழுத்தம் திருத்தமாக, உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டை காக்க கழகம் தான் ஆட்சி வரவேண்டும், 7 ஆவது முறையும் நாம் தான், இனி எப்போதும் நாம் தான் என நிலை வரவேண்டும்..எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிப்போம்” எனப் பேசினார். இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Embed widget