மேலும் அறிய

DMK Election Manifesto: திமுகவின் தேர்தல் வாக்குறுதி.. ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் உருவானது எப்படி?

என்ன பொருள் வேண்டும் என்ற தேர்வை மக்களிடம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தார். அதன்படியே இந்த ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக அளித்துள்ள வாக்குறுதியில் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் பின்னணி குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., விளக்கமளித்துள்ளார். 

இல்லத்தரசி கூப்பன் திட்டம்

திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.,யிடம் இல்லத்தரசி கூப்பன் திட்டம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ஒரு பொருளை மட்டும் தேர்தல் வாக்குறுதியின்படி கொடுக்கலாம். அப்படிப்பட்ட பொருள் ஏற்கனவே அவர்கள் வீட்டில் இருக்கலாம். இதனால் பயன்படாமல் போகலாம். அதனால் என்ன பொருள் வேண்டும் என்ற தேர்வை மக்களிடம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தார். அதன்படியே இந்த ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே இருக்கும் பொருளை மாற்றவோ அல்லது தேவையானதை வாங்கவோ ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த கூப்பனை அருகில் இருக்கும் கடையில் கொண்டு போய் சேர்ப்பதால் அங்கிருக்கும் வியாபாரிகளும் பயனடைவார்கள். உற்பத்தியாளர்களுக்கும் இது கைகொடுக்கும்” என தெரிவித்தார். 

நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகள்

மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட 80 ஆயிரம் கருத்துக்களை கேட்டறிந்தோம். அவர்களை 12 இடங்களில் நேரடியாக சந்தித்தும்,  இ-மெயில் மூலமாகவும் வந்த கோரிக்கைகள் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் அறிக்கை கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியுமா முடியாத என்ற சந்தேகத்தில் இருக்கக் கூடாது எதை நிறைவேற்ற முடியுமோ அதை மட்டுமே தேர்தல் அறிக்கையில் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளோம்.. 

இல்லத்தரசிக்கான ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் எந்த அடிப்படையில் வழங்க போகிறோம் என்ற கேள்விக்கு முதல்வர் தெளிவாக பதிலளித்துள்ளார். அதாவது வருமான வரி செலுத்தாத பெண்களுக்கு இந்த கூப்பன் வழங்கப்படும்.  எல்லாவிதமான வளர்ச்சி பாதைகளுக்காகவும் இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா பகுதி மக்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பது இந்த தேர்தல் அறிக்கையின் நோக்கமாகும். 

அனைத்து துறையிலும் உள்ள நிபுணர்களை கலந்தாய்வு செய்து முதலமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே மக்களுக்கு வாக்குறுதியாக கொடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டு கடன் அதிகமாக உள்ளது என்ற பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்” என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget