மேலும் அறிய

TVK Party: தவெக என்னை நாயாக கூட மதிக்கவில்லை.. திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் ஆதங்கம்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் உங்கள் சொந்த பணத்தை செலவு செய்யுங்கள். மற்றவர்களிடம் பெற்றுக் கொண்டு அதனை கொடுக்க வேண்டாம் என தவெக தலைவர் விஜயை அஜிதா ஆக்னல் விமர்சித்துள்ளார்.

உழைத்தவர்களுக்கு தவெகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. என்னை ஒரு நாயாக கூட மதிக்கவில்லை என திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அஜிதா ஆக்னல் , “ஊழல் பண்ண மாட்டோம், காசு வாங்க மாட்டோம் என விஜய் சொல்கிறார். ஆனால் கட்சியில் பதவியே பணம் பெற்றுக் கொண்டு தான் கொடுத்தார்கள். இல்லை என யாராவது சொல்ல சொல்லுங்கள். மக்கள் இயக்கத்தில் இருந்து உழைத்த எத்தனை பெண்களுக்கு நீங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள். மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து உழைத்த எத்தனை பேருக்கு சீட் கிடைத்திருக்கிறது என சொல்லுங்கள். 

தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கூட பணம் வாங்கிக் கொண்டு தான் கொடுக்கப்பட்டது. நான் திமுக கைக்கூலி என்றால், முந்தைய நாள் அமைச்சராக இருந்த ஒருவர் தவெகவில் சேர்கிறார். அவருக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்படுகிறது. ஜாமீனில் வெளியே வந்தவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் என்ன தப்பு செய்தேன்?. எனக்கு ஏன் சீட் மறுக்கப்பட்டது?. முறையான காரணத்தை சொல்ல வேண்டும்.

பணம் பெற்றுக் கொண்டு தான் தேர்தலில் சீட் கொடுத்தார்கள். மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் உங்கள் சொந்த பணத்தை செலவு செய்யுங்கள். மற்றவர்களிடம் பெற்றுக் கொண்டு அதனை கொடுக்க வேண்டாம். பிறப்புக்கு எல்லா உயிர்க்கும் என தவெக சொல்கிறது. தனித் தொகுதியில் மட்டும் தான் தலித் பின்னணி வேட்பாளர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. ஏன் பொதுத்தொகுதியில் அத்தகைய பின்னணி கொண்டவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை?. 

உழைத்தவர்களுக்கு தவெகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. என்னைப் போல ஆயிரம் பேர் உழைத்துக் கொண்டு ஓரமாக அமர்ந்திருக்கிறார்கள்.  மாவட்ட செயலாளர் பதவி, தேர்தலில் வாய்ப்பு மறுப்பு என்பதால் கட்சியைன் விட்டு போய் விடுவீர்களா என பலரும் என்னிடம் கேட்டார்கள். 

தவெகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம்  வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் வந்தவுடன் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்படியாக பொறுப்பு வழங்கப்பட்டால் தான் மக்கள் பணி செய்ய முடியும். வந்தவுடன் முதல்வராக வேண்டும் என எதற்கு நினைக்க வேண்டும். ஒரு அமைப்பை தொடங்கி மக்கள் பணி செய்ய முடியும். 

ஒரு அங்கீகாரம் இருந்தால் தான் மக்கள் பணியாற்ற முடியும். அதைத்தானே நானும் கேட்டேன். நான் எந்த கட்சிக்கும் போகவில்லை. திமுகவுக்கு நான் வேலை பார்க்கவில்லை. பெண்ணாக இருந்ததால் தவெகவில் நிராகரிக்கப்பட்டேன். ஆனால் தாயுள்ளத்துடன் மு.க.ஸ்டாலினும், கனிமொழியும், அனிதா ராதாகிருஷ்ணனும் உன் உழைப்புக்கான அங்கீகாரத்தை நாங்கள் கொடுக்கிறோம் என சொன்னார்கள். 

ஆக, நான் பணம் சம்பாதிக்க திமுகவில் இணையவில்லை. தவெகவில் பொறுப்பு வழங்க சொல்லி 5 ஆயிரம் முறை கேட்டிருப்பேன். பொதுச்செயலாளர் ஆனந்த் காலில் விழுந்து கூட கேட்டேன். நான் உண்மையாக உழைப்பேன் என சொன்னேன். என்னை உதாசீனப்படுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் கட்சிக்காக வேலைப் பார்த்த யாருக்காகவும் சீட் கொடுக்கவில்லை. நான் தவெகவை வளர்த்தேன். அக்கட்சி என்னை நாயாக கூட மதிக்கவில்லை. என்னுடன் இருந்தவர்களுக்கு என் பணி என்னவென்று தெரியும். 

யாருமே என்னை மதிக்கவில்லை. நிர்கதியாய் நின்றபோது திமுக என்னை அழைத்தது. அக்கட்சியில் இணைந்து விட்டேன். என்னுடைய மக்கள் பணி பணத்திற்காக கிடையாது” என தெரிவித்துள்ளார். . 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
உதகை மலைப்பாதை நிலச்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து: பயணிகள் நிலை என்ன?
TN Weather News: லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
லீவு விட்ட மழை? தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி? சென்னைக்கு வார்னிங்? - வானிலை அறிக்கை
TN Govt: எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
எரிபொருளுக்கான வரியை குறைத்த தமிழ்நாடு அரசு - டிக்கெட் விலை குறைந்து, கூடுதல் விமானங்கள் வருமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
Bayon Vs Creta: க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
க்ரேட்டாவையே தூக்கிச் சாப்பிடும் பேயோன்? கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள் - பெஸ்ட் SUV போட்டி
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
Embed widget