மேலும் அறிய

TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்

TN Election 2026 Today Campaign: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரின் இன்றையை பரப்புரை விவரங்களை கீழே வழங்கப்பட்டுள்ளன.

TN Election 2026 Today Campaign: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரின் இன்றையை பரப்புரை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் உள்ளது. இதனால் வேட்பாளர்கள் தொடங்கி அரசியல் கட்சி தலைவர்கள் வரையிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர் வீடு வீடாகவும், வீதியாகவும் சென்று வாக்கு சேகரிக்க, தலைவர்கள் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோ போன்ற திட்டங்கள் மூலம் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.  முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் மக்கள் வெள்ளத்தில் சென்னையில் நேற்று தியாகராய நகர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று எந்த அரசியல் கட்சி தலைவர்கள் எந்த பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கின்றனர் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தலைவர்களும்.. இன்றைய தேர்தல் பரப்புரையும்..

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- நாமக்கல், பெரம்பலூர் பொதுக் கூட்டங்கள்
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- கோவை, திருப்பூர்
  • தவெகதலைவர் விஜய்:-சென்னையில் பிற்பகல் நடைபெறும் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
  • பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- பென்னாகரம்
  • நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- நாகப் பட்டினம், கீழ்வேளூர், திருவாரூர், நன்னிலம், கும்பகோணம், பாபநாசம்
  • தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:- விருதுநகர்
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மத்தியக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்: பத்மநாபபுரம்
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம்:- பழனி, ஒட்டன்சத்திரம்
  • திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-செஞ்சி, திருவண்ணாமலை
  • பாஜனதா முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:-வாசுதேவநல்லூர்
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன்:-திருத்துறைப்பூண்டி, நாகை, கீழ்வேளூர்
  • மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:- ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர்
  • அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, கோவில்பட்டி

போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு

அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல் பரப்புரை காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலான பகுதிகளில் தலைவர்கள் மாலை நேரங்களிலேயே தேர்தல் பரப்புரையை மேற்கொள்கின்றனர். இதனால் அந்த நேரத்தில் மிக முக்கியமான சந்திப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். எனவே வேலைக்கு சென்று வீடு திரும்புபவர்கள் உள்ளிட்டோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளமால் பயணம் செய்வதற்கான உரிய வழித்தடங்களை முன்கூட்டியே பரிசீலித்துக்கொள்வது நல்லது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget