எழுந்ததும் நாலு கறிவேப்பிலையை மெல்லுங்க - தலை தொடங்கி கால் வரை பலன்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

செரிமான அமைப்பு நல்லபடியாக செயல்படும் செரிமானம் மேம்படும்

ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்க உதவுகிறது. உடல் எடை குறையும்.

முடி உதிர்வதை குறைத்து, முடியை வலிமையாக்குகிறது. கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நச்சுக்களை அகற்ற உதவுகிறது. கல்லீரலுக்கு நல்லது.

இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். ரத்த சோகை குறையும்.

தோல் பிரகாசமாக மாறும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோலுக்கு பளபளப்பை கொடுக்கும்.

கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

ஒரு நாளைக்கு 8 முதல் 10 இலைகள் சாப்பிட்டால் போதும்.