மேலும் அறிய

MK Stalin: விஜயை முந்திய முதல்வர் ஸ்டாலின்.. திருச்சி கிழக்கில் தீவிர பரப்புரை... அமோக வரவேற்பு!

இன்று காலையில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜூக்கு ஆதரவாக அவர் காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டே வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மிக தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் வாக்கு சேகரிக்கிறார். 

சூடுபிடித்த தேர்தல் களம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாடு அரசியல் களம் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா - டாக்டர் ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் யாருக்கு வாக்குகள் கிடைக்கும், எந்த கட்சியின் வாக்குகள் சிதறப்போகிறது என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி கிழக்கில் முதல்வர் ஸ்டாலின் 

இந்த நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். தொடர்ந்து நேற்றிரவு திருச்சி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலையில் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜூக்கு ஆதரவாக அவர் காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டே வாக்கு சேகரித்தார். 

அப்போது பொதுமக்கள் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பலர் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வின் போது அமைச்சர்களான கே.என்.நேருவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் உடனிருந்தனர். திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என்.நேருவும், திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸூம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து இன்று  திருச்சி உழவர் சந்தை பகுதியில் காலை 9 மணிக்கும் மற்றும் கரூர் ராயனூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

இதனிடையே இதே திருச்சி கிழக்கு தொகுதியில் தான் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 2ம் தேதியான நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் அவர், தொடர்ந்து அங்கு பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதற்காக நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜய்க்கு முன்பாக திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget