மேலும் அறிய

MK Stalin: விஜய் வேண்டுமா? - சிந்திச்சு பார்க்கணும்.. பெரம்பூரில் சம்பவம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் சென்னை பெரம்பூர் தொகுதியில் நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்த நிலையில், நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

பெரம்பூரில் மக்களோடு இணைந்து பணியாற்றக்கூடிய திமுக வேட்பாளர் வேண்டுமா அல்லது விஜய் வேண்டுமா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “நான் உங்களை கேட்டுக் கொள்ள விரும்புவது என்னவென்றால், உங்களோடு இருந்து உங்களுக்காக   ஒரு ஊழியனாக, உங்கள் தொண்டனாக, உங்கள் வீட்டு பிள்ளையாக பணியாற்றும் ஒருவர் வேண்டுமா அல்லது ஏதோ எங்க இருந்து புதுசா அரசியலுக்கு வந்து நாடகம் நடிச்சிட்டு இருக்குற அவர் வேண்டுமா என சிந்தித்து பாருங்கள். நான் யாரையும் அரசியலில் தாக்கி பேசவும் விரும்பவில்லை. விமர்சனம் செய்யவும் விரும்பவில்லை. ஏனென்றால் அது என் பழக்கம் இல்லை.

யாரையும் எதிர்த்து மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசும் பழக்கம் கிடையாது. நான் மேயராக இருந்து ஆற்றிய பணியும், கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சராக பணியாற்றி செய்த பணிகளும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90 சதவிகிதம் நிறைவேற்றியுள்ளோம். இன்னும் 10 சதவிகிதம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. நான் இல்லை என மறுக்கவில்லை.

அந்த திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி, நிதி கொடுக்க மறுக்கிறது. நம் வீட்டு பிள்ளைகள் படிப்பதற்கான நிதியை கொடுக்க மறுக்கிறார்கள். கேட்டால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள சொல்லி கூறுகிறார்கள். நான் அதற்கு நீங்கள் ரூ.10 ஆயிரம் கொடுத்தாலும் இந்தியை ஏற்க மாட்டோம் என தெரிவித்து விட்டேன். 

இப்படி பல கொடுமைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. 2021 தேர்தல் நேரத்திலும், இப்போது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தியுள்ளோம். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் மாதாந்திர தொகை உயர்த்தப்படவிருக்கிறது. இல்லத்தரசி திட்டம் மூலம் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படவுள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு என்ற வெளியிட்ட ஸ்டாலின், “வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றி வரும் பெருமிதத்தோடு திரு. வி.க. நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர், பெரம்பூர் தொகுதிகளில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன். கண்கவர் பேருந்து நிலையங்கள், ஏழை மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள், முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள், விளையாட்டு அரங்கங்கள், பாலங்கள், பூங்காக்கள், ஜிம், திருமண மாளிகைகள், மழைநீர் வடிகால்கள் என வடசென்னை மொத்தமும் செய்யப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் முழுவதுமாக வாக்குகளாக மாற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget