மேலும் அறிய

TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!

சூடுபிடிக்கும் தேர்தல் களம்... நெருங்கும் வேட்புமனுத் தாக்கல்- பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் குழப்பம்: என்னதான் காரணம்?

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டும் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காமல் உள்ளன.

160-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில், பாஜக, காங்கிரஸ் இரட்டை இலக்க வேட்பாளர்களையே கொண்டிருந்தும் இன்னும் வேட்பாளர்களை முடிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றன.

எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

திமுக – 164

அதிமுக – 166

காங்கிரஸ் - 28

பாஜக - 27

 தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் 3 - புனித வெள்ளி, ஏப்ரல் 4 - சனி, ஏப்ரல் 5 - ஞாயிறு என்பதால் நாளை (ஏப்ரல் 2) மற்றும் ஏப்ரல் 6 ஆகிய இரு தினங்களே உள்ளன.

இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இன்னும் வேட்பாளர்களை முடிவு செய்யாமல் திணறி வருகின்றன.

TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!

என்ன காரணம்?

பாஜக வேட்பாளர் பட்டியலைப் பொறுத்தவரை கோவை வடக்கு தொகுதி யாருக்கு என்பதில் வானதி சீனிவாசனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே போட்டி நிலவுகிறதாம். கோவை தொகுதி எனக்குத்தான், வேண்டுமெனில் அண்ணாமலையை மொடக்குறிச்சியில் நிற்கச் சொல்லுங்கள் என்று வானதி தரப்பு கூறிவிட்டதாகவும் அண்ணாமலை கோவை வடக்குதான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் உட்கட்சிப் பூசல் குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. அதன் வேட்பாளர்கள் தேர்வு ஒருதலைப் பட்சமாக நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் அதுபற்றி வெளிப்படையாகவே பொங்கினர். இதுகுறித்து காங்கிரஸ் டெல்லி மேலிடத்துக்குப் புகார் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதனால் தாமதம் ஆகி வருவதாகவும் கிசுகிசுக்கிறது சத்யமூர்த்தி பவன்.

சூறாவளி வேகத்தில் ஈபிஎஸ், ஸ்டாலின்!

இதற்கிடையே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சித் தலைவர்களும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் ஆளாக அதிமுகதான் தொகுதிப் பங்கீட்டை முடித்தது. தேர்தல் அறிக்கையையும் எடப்பாடி பழனிசாமிதான் முதலில் வெளியிட்டார்.

தொடர்ந்து 166 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, அறிவிப்பை வெளியிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எனினும் இரு தலைவர்களும் தங்களின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த (பாஜக, காங்கிரஸ்) வேட்பாளர்கள் யாரென்றே தெரியாமல், அவர்களுக்கும் சேர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
TR Balu: ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
TR Balu: ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Maruti Alto k10: பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
Embed widget