மேலும் அறிய

TVK Vijay: மே 4ம் தேதி விஜய் வெளிநாடு செல்கிறாரா? - ஆதவ் அர்ஜூனா சொன்ன பதில்.. தொண்டர்கள் ஷாக்!

சென்னை லயோலா கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆதவ் அர்ஜூனா  இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மே 4ம் தேதி விஜய் வெளிநாடு செல்வதாக வெளியான தகவல் பற்றி பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் விஜய் வெளிநாடு செல்லவுள்ளதாக வெளியான தகவலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைக் குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விளக்கமளித்துள்ளார். 

234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஏப்ரல் 23ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 85.10% மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த முறை விஜயின் அரசியல் வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கணித்துள்ளனர். தேர்தலின் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. 

இந்த நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை ஆதவ் அர்ஜூனா  இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லா வேட்பாளர்களையும் அழைத்து மே 4ம் தேதி செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி தலைவர் விஜய் அறிவுறுத்தி வருகிறார். அதனால் எங்களைப் பொறுத்தவரை மே 4ம் தேதி மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை தருவார்கள் என்பதை உறுதியாக நம்புகிறோம். 

அன்று மக்களுடைய முடிவை நீங்கள் பார்ப்பீர்கள். வாக்கு எண்ணும் மையத்தில் இருக்க வேண்டிய நபர்கள் பற்றிய விபரத்தை தயார்  செய்ய சொல்லியிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை அன்று செய்ய வேண்டிய பணிகளை தலைவர் தொடங்கி 234 தொகுதி வேட்பாளர்கள் வரை அனைவரும் தயார் செய்து வருகிறார்கள். 

தேர்தல் நாளில் எங்கள் தவெக வேட்பாளர் சினோரா அசோக் சேகர்பாபு மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயமாகும். தவெகவில் இருந்து யாரும் பணம் கொடுத்து ஓட்டை வாங்கவில்லை. வீடு வீடாக மக்களிடம் வாக்கு கேட்டு பெரிய புரட்சியை மேற்கொண்டார்கள். விஜய் தினமும் மீட்டிங்கில் தான் இருக்கிறார்” என தெரிவித்தார்.  

அப்போது  அவரிடம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாக தகவல் வெளியானது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன ஆதவ் அர்ஜூனா, “முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானல், துணை முதலமைச்சர் துபாய், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஓய்வெடுத்து வருகிறார். விஜய் தினமும் வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் ஆஸ்திரேலியாவுக்கு இல்லை, நாளைக்கு நிலவுக்கு போகிறார். திமுக தான் அதற்கான ராக்கெட்டை தயார் செய்து கொண்டிருக்கிறது என கிண்டலாக பதிலளித்தார்.

தயவு செய்து வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம். மக்களுக்கு நிறைய கடமைகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி விஜய் சிந்தித்து கொண்டிருக்கிறார். கடைசி 4 நாட்களில் தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறியுள்ளது. விஜய் முதலமைச்சராக வேண்டும் என 234 தொகுதிகளிலும் மக்கள் வாக்களித்துள்ளார்கள். 

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget