வெயில் காலத்தில் சுகமாக தூங்க டிப்ஸ் இதோ!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

நீங்கள் அறையை குளிர்ச்சியாக வைத்திருங்கள். மின்விசிறி, கூலர் அல்லது ஏசி பயன்படுத்தி அறை வெப்பநிலையை குறைக்கவும்.

லேசான பெட்ஷீட்களைப் பயன்படுத்துங்கள். பருத்தி பெட்ஷீட்கள், போர்வைகள் பயன்படுத்தினால் வியர்வை குறைவாக வரும்.

படுப்பதற்கு முன் லேசாக குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் குளிர்ச்சியாகும்.

நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். நீரிழப்பு தூக்கத்தை சீர்குலைக்கும்.

இரவில் அதிகமாக அல்லது எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்து தூக்கம் கடினமாகிறது.

லேசான, தளர்வான ஆடைகளை அணியுங்கள். பருத்தி, தளர்வான உடைகளை அணிவது நல்லது.

மின்னணு சாதனங்களை குறையுங்கள். தூங்குவதற்கு முன் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவதை குறைத்தால் நல்ல தூக்கம் வரும்.

காபி, தேநீர் குறையுங்கள். மாலைக்குப் பிறகு காஃபீன் எடுத்துக் கொண்டால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.

காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். ஜன்னல்களை திறந்து காற்று சுழற்சி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

தியானம், ஆழ்ந்த சுவாசம் போன்ற முறைகள் தூக்கத்திற்கு உதவும்.