மேலும் அறிய

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றி பேசுகிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்வோம் என்று யாரும் பேசவில்லை - பிரேமலதா விஜயகாந்த் !

ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாவலர் அண்ணன் ஸ்டாலின் தான். அண்ணனிடம் நாங்கள் சொல்வோம் என்று தான் சொன்னேன். - பிரேமலதா விஜயகாந்த்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றி பேசுகிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்வோம் என்று யாரும் பேசவில்லை. நிச்சயமாக தீபமும் ஏற்றப்படும் மக்களின் வாழ்வும் உயரும்.- திருப்பரங்குன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு.
 
தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை
 
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியனை ஆதரித்து திருநகர் பகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில்...," திருப்பரங்குன்றம் என்றாலே முருகனின் ஸ்தலம். இந்த மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி மக்கள், விரும்பும் போற்றும் கூட்டணி. அண்ணன் ஸ்டாலின் இந்த கூட்டணியை மிகச் சிறப்பாக கட்டமைத்து உறுதி செய்துள்ளார். மதுரையின் மருமகளாக உங்கள் வீட்டுப் பெண்ணாக இந்த திருப்பரங்குன்றத்தில் தான் கேப்டன் கட்சி ஆரம்பித்தார். ரெண்டு மருமகளும் சேர்ந்து வந்திருக்கிறோம். மதுரைக்கு இரண்டு மகள்களாக வந்து உங்கள் அனைவருக்காகவும் உழைப்பதற்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறோம்.
 
எய்ம்ஸ் இன்னும் முடியவில்லை
 
வேட்பாளர் பொறியாளர் பட்டம் பெற்றவர். இதில் ஐடி நிறுவனம் நடத்தி 500 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார் என்றால் இந்த தொகுதியை எப்படி பார்த்துக் கொள்வார் என்று நீங்கள் பாருங்கள். மருத்துவ முகாம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி இருக்கிறார். வேட்பாளர் வெற்றி பெற்று நிச்சயமாக இங்கு மதுரை மல்லி நறுமண தொழிற்சாலை கொண்டுவரப்படும். எய்ம்ஸ் விரைவில் கொண்டு வரப்படும். ஏற்கனவே தம்பி  உதயநிதி எடுத்துச் சென்ற செங்கல் தமிழக முழுவதும்  பேசு பொருளானது. இப்போது எய்ம்ஸ் இன்னும் முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று நமது வேட்பாளர் நிச்சயமாக எய்ம்ஸ் கொண்டு வர முயற்சி செய்வார். அண்ணாமலை மெட்ரோ கொண்டு வருவோம் என்று சொன்னார் ஆனால் வரவில்லை. 
 
நிச்சயமாக தீபமும் ஏற்றப்படும் மக்களின் வாழ்வும் உயரும்
 
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை பற்றி பேசுகிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்வோம் என்று யாரும் பேசவில்லை. நிச்சயமாக தீபமும் ஏற்றப்படும் மக்களின் வாழ்வும் உயரும். கிருத்திகா தங்கபாண்டி மக்களின் வாழ்வில் தீபம் ஏற்றுவார், ஒளி ஏற்றுவார். நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறேன் விருதுநகரில் விஜய பிரபாகரன், மணிமாறன் என தொடர்ந்து  வருகிறேன். அண்ணன் ஸ்டாலின் பெண்களுக்கு நிறைய திட்டங்களை அறிவித்துள்ளார். இறுதியாக திமுகவின் தேர்தல் அறிக்கைகளை விளக்கி சொல்லி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டிக்கு வாக்கு சேகரித்தார்.
 
ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்க போவது உறுதி
 
சில பத்திரிகைகளில் வந்த செய்தி தவறானவை அண்ணன் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதல்வராக போவது உறுதி ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைக்க போவது உறுதி. அப்படி இருக்கும்போது பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வார் என்று கூறினேன் ஆனால் நான் சொன்னதை திரித்துக் கூறிவிட்டார்கள். ஒட்டுமொத்த பெண்களின் பாதுகாவலர் அண்ணன் ஸ்டாலின் தான். அண்ணனிடம் நாங்கள் சொல்வோம் என்று தான் சொன்னேன். ஆயிரம் கைக்கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது.

தலைப்பு செய்திகள்

TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget