(Source: ECI/ABP News/ABP Majha)
Local Body Election | சிவகங்கையில் திமுக வேட்பாளருக்காக பணப்பட்டுவாடா செய்த இளைஞர் சிக்கினார்
’’இளைஞர் அழகு செல்வம் பணப்பட்டுவாடாவுக்காக 15,000 பணம் எடுத்து வந்ததாகவும், அதில் விநியோகம் செய்தது போக மீதம் 6,000 இருந்ததாகவும் கூறினார்’’
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்த நிலையில் நாளை பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதியாக 12 ஆயிரத்து 607 பதவியிடங்களுக்கு, 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பரப்புரை ஓய்ந்ததால் சம்பந்தப் பட்ட வார்டுகளுக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பறக்கும் படை மற்றும் போலீசாரின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதையும் மீறி பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் நடந்து வருகிறது.
#Abpandu Sivaganga Municipal Area, seized Rs.6000/- alongwith voters list from one Azhaguchelvam while he was distributing amount to the voters in 26th Ward Sivaganga canvassing votes to the 26th ward DMK candidate today at 10.10 am. Action has been taken to file FIR. . . . pic.twitter.com/3iZYB8SEQN
— Arunchinna (@iamarunchinna) February 18, 2022