மேலும் அறிய

"பெண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயன்றது பாஜக" - கனிமொழி எம்.பி. ஆவேசம்!

பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்று பாஜக சொல்லி, பெண்களின் பின்னால் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயன்றனர்: நெய்வேலி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு

கடலூர் : பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்று பாஜக சொல்லி, பெண்களின் பின்னால் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயன்றனர்: நெய்வேலி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம்,நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து, பண்ருட்டி - கும்பகோணம் மெயின் ரோடு NLC ஆர்ச் கேட் அருகில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி. நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் தேர்ந்தெடுத்து உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ள வேட்பாளர் சபா ராஜேந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்யுமாறு உங்களை எல்லாரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய சட்டமன்ற உறுப்பினர், ஏற்கனவே இரண்டு முறை உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர். மீண்டும் அவருக்கு வெற்றி வாய்ப்பை வழங்கி, உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றும் அந்த பொறுப்பை, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவருக்கு அளிக்குமாறு உங்களை எல்லாரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் நம்முடைய முதலமைச்சரின் பெயரைச் சொல்லி, தமிழ்நாட்டிற்காக பாடுபடும் முதலமைச்சர், தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அனைத்தும் நிறைவேற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டை பாதுகாக்கும் முதலமைச்சர், நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றி அமைக்கும் முதலமைச்சர் என்ற அந்த உரிமையுடன் மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறோம்.

ஆனால், அதே நேரத்தில் நம் எதிரணி கூட்டணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கெல்லாம் தெரியும் — நேற்றைய செய்தியை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்களா? தலைவர் கலைஞர் அவர்கள் உங்களுக்கு தொலைக்காட்சி வழங்கியது, இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பார்க்கத்தான்.

நேற்று நாடாளுமன்றத்தில், எதிரணியாக இருக்க வேண்டிய பாஜகக்கு நம்முடைய எடப்பாடி அவர்கள் ஆதரவு அளித்து, அவர்கள் சொல்வதற்கெல்லாம் கை கட்டி தலையாட்டிக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட கூட்டணி, தேர்தல் நேரத்தில் திடீரென நாடாளுமன்றத்தை கூட்டியது.

எதிர்க்கட்சிகள் வரமாட்டார்கள்; நாம் எதை கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நாம் தலைவர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் வழியில் வந்தவர்கள். நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், தொடர்ந்து “மாநில உரிமைகளை காப்போம்; அதற்காக போராடுவோம்” என்று உறுதியாக கூறி வருகிறார்.

தேர்தல் பணிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்; தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க, நீங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லுங்கள் என்று முதலமைச்சர் கூறினார். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை கொண்டு வருவதாக பாஜக தெரிவித்தது. அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. பெண்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மறுப்பு இல்லை.

பாஜக ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. திடீரென்று பெண்கள் மீது அக்கறை வந்ததுபோல் பேசுகிறார்கள். இடஒதுக்கீட்டை கொண்டு வருவோம் என்கிறார்கள்; ஆனால் எப்படி கொண்டு வரப் போகிறார்கள்? தற்போது உள்ள 543 இடங்களில் 33 சதவீதம் வழங்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? “அப்படி வழங்க முடியாது; 543 இடங்களை 850 ஆக உயர்த்திய பிறகு, அதில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குகிறோம்” என்கிறார்கள்.

நாம் என்ன சொல்கிறோம்? கண்ணுக்கு முன்னால் ஒரு பானையில் சாப்பாடு இருக்கிறது; அதை பெண்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பகிர்ந்து கொடுங்கள் என்போம். ஆனால் அவர்கள், “இப்படி கொடுக்க முடியாது; பெரிய பானை வைத்து பொங்கி, அதிலிருந்து கொடுக்கிறோம்” என்கிறார்கள். ஆனால் அந்த பெரிய பானையை கொண்டு வந்து பொங்க வைக்கிறார்கள் என்றால், அதில் நமக்கு கொஞ்சமே கிடைக்கும்; தமிழ்நாட்டுக்கு கொஞ்சம், கேரளாவுக்கு கொஞ்சம், கர்நாடகாவுக்கு கொஞ்சம் மட்டுமே கிடைக்கும்.

ஏனெனில் ஒன்றிய அரசு முன்பு “நாம் இருவர், நமக்கு இருவர்” என்று கூறியது; இப்போது அது “ஒருவர்” ஆக மாறிவிட்டது. அதை நம்பி தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் மக்கள், குடும்பத்திற்கும் நாட்டிற்கும் நல்லது என்று நினைத்து குழந்தைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டனர். ஆனால் சில மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அதனால் அந்த பெரிய பானையில் அவர்களுக்கு அதிகம் கிடைக்கும்; நமக்கு குறையும்.

இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், இந்திய மக்களின் உரிமைகளுக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். 543 இடங்களில் தமிழ்நாட்டுக்கு 39 எம்பிக்கள் உள்ளனர். அதை 850 ஆக உயர்த்தினால், மக்கள் தொகை அடிப்படையில் நம்முடைய எண்ணிக்கை குறைந்துவிட்டால், அப்போது நம்முடைய உரிமை பறிக்கப்படுமா இல்லையா?

நாம் சொல்வதை கேட்க யாரும் இருக்கமாட்டார்கள். குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தாலும், நம்முடைய ஓட்டே தேவையில்லை என்று கூறிவிடுவார்கள். பீகார், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலேயே பிரச்சாரம் செய்து முடித்துவிடுவார்கள்.

பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்று பாஜக சொல்லி, பெண்களின் பின்னால் இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க முயன்றனர். அது “ஹியூமன் ஷீல்டு” (Human Shield) போல பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் உரிமைகளையும் தென் இந்தியாவின் உரிமைகளையும் பறிக்க நினைத்தார்கள். ஆனால் இது நடக்கும் என்று அறிந்து, நம்முடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தென்னிந்திய மாநில முதலமைச்சர்களை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தினார். அனைவரும் ஒன்றிணைந்து இதை எதிர்க்க வேண்டும் என

்று தீர்மானித்தனர். தொடர்ந்து அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார். இதைப் பற்றி தொடர்ந்து பேசி, நேற்று பாஜக கொண்டு வந்த அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. முந்தைய நாள் நம்முடைய உரிமைகளை பறிக்கக்கூடிய கருப்பு நாளாக இருந்ததால், கருப்பு கொடி ஏற்றினோம். ஆனால் நேற்று பட்டாசு வெடித்து கொண்டாடி, அந்த சட்டத்தை முறியடித்து வெற்றி பெற்ற நாளாக மாறியது. இதுதான் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடும் திராவிட முன்னேற்றக் கழகம். போராடும் தலைவர் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின்.

பாஜகவுடன் கை கட்டிக்கொண்டு நிற்கும் ஒருவர், முதலாளி சொல்வதையே செய்வார். பாஜகவின் குரலாக ஒலிக்கக்கூடிய கூடிய எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். பாஜகவுடன் கை கட்டிக்கொண்டு நிற்கும் ஒருவர், முதலாளி சொல்வதையே செய்வார். பாஜகவின் குரலாக ஒலிக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். பெண்களுக்கான மசோதாவை இப்போதே கொண்டு வாருங்கள். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து கொண்டு வர முயன்றால், அதை நாம் தொடர்ந்து எதிர்ப்போம்; முறியடித்துக் காட்டுவோம். முறியடித்துக் காட்டிய தினம் நேற்று.

நம்முடைய உரிமைகள், நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம், நம்முடைய மொழி—இவற்றை பாதுகாக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும். தமிழ்நாட்டை டெல்லியில் அடகு வைக்க நினைப்பவர்களுக்கு இந்த மண்ணில் இடம் கிடைக்காது. நம்முடைய கூட்டணி கொள்கை கூட்டணி. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன. இதுதான் கொள்கை கூட்டணி. அதிமுகவின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.

இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழ்நாட்டை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு, தந்தை பெரியாரின் மண்ணில் ஒரு பிடி மண் கூட கிடைக்காது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும். நேற்று அந்த மசோதா தோல்வியடைந்தது போல, இனி தொடர்ந்து அவர்களுக்கு தோல்விகள் தான் பாஜகவிற்கு வரப்போகிறது.ம்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். மகளிர் உரிமைத் தொகை 1 கோடி 31 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அது 2000 ரூபாயாக உயர்த்தப்படும். காலை உணவு திட்டம் தற்போது 5ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது; மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அது 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் மாணவர்களின் எதிர்காலம் சரியான பாதையில் வழிநடத்தப்படுகிறது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்கூட உயர்ந்த நிலைகளை அடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்துமதி போன்றோர் UPSC தேர்வில் வெற்றி பெற்று IAS ஆகும் நிலையை அடைந்துள்ளனர். மேலும், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி பார்வதியும் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இப்படியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையானதை செய்து வரும் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டை பாதுகாக்க, தமிழ் மொழியை காக்க, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பேசினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget